ஆப்கானிஸ்தானிடம் அகதியாக அடைக்கலம் கேட்கும் நியூசிலாந்து கர்ப்பிணி பெண் ரிப்போர்டர்.. பின்னணியில் இப்படி ஒரு காரணம்
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பின்னர் அவர்கள் நடத்திய முதல் செய்தியாளர் சந்திப்பில், கலந்து கொண்ட ஒரே பெண் ஊடகவியலாளராக இருந்தவர் நியூசிலாந்தை சேர்ந்த சார்லோட் பெலிஸ்.
2019ம் ஆண்டு முதல் கத்தாரைச் சேர்ந்த அல் ஜசீரா செய்தி நிறுவனத்துக்காக பணியாற்றி வரும் இவர் காபுலை மையமாக கொண்டு ஆப்கன் குறித்த செய்திகளை சேகரித்து வந்தார். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய போது, நடத்திய முதல் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஒரே பெண் ஊடகவியலாளராக இருந்தவர் சார்லேட் பெலிஸ். நியூசிலாந்து நாட்டை சேர்ந்த இவர், கடந்த 2019ம் ஆண்டு முதல் கத்தாரைச் சேர்ந்த அல் ஜசீரா செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர், காபுலை மையாக கொண்டு ஆப்கன் குறித்த செய்திகளை சேகரித்து வந்துள்ளார். தாலிபான்களிடம் மிகவும் துணிச்சலாக பெண்களுக்கு எதிரான அநீதிகளை எதிர்த்து குரல் எழுப்பியவரும் இவரே. இந்நிலையில், கடந்த ஆண்டு கத்தாருக்கு சென்றபோது தான் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. கத்தாரில் திருமணம் ஆவதற்கு முன் கர்ப்பமாவது சட்டவிரோதம் ஆகும். இதனால்,சார்லேட் தனது சொந்த நாடான நியூசிலாந்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இவர், பெல்ஜியத்தை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் உறவில் இருந்து வருகிறார். நியூசிலாந்து செல்ல முயற்சித்த நிலையில், அங்கு கடைப்பிடிக்கப்படு வரும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக விசா கிடைப்பது தாமதமானது.
கத்தாரில் இருந்தால் சட்டவிரோதம் என்ற நிலையில், வேறு வழியின்றி சார்லேட் ஆண் நண்பருடன் பெல்ஜியத்துக்கு சென்றார். இருப்பினும் அவர்களால் அங்கு நீண்டகாலம் தங்கியிருக்க முடியவில்லை. அங்கிருந்து மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கே திரும்பினார். இந்நிலையில், தனக்கு தெரிந்த தாலிபான்களை சந்தித்து தான் கர்ப்பமாக இருப்பது ஏதேனும் பிரச்னையை ஏற்படுத்துமா என கேட்டுள்ளார். இதில் பிரச்னை வராது யாரேனும் உங்களை வழிமறுத்தால் திருமணம் ஆகிவிட்டது என்று கூறுங்கள். பிரச்னை ஏற்பட்டால் தங்களை அணுகுங்கள் என்று தாலிபான்கள் கூறியுள்ளனர்.
இதனால் மனவேதனையடைந்த சார்லேட் தனக்கு நேர்ந்த அவலங்களை எடுத்துரைத்து, The New Zealand Herald என்ற பத்ரிகைக்கு மடல் ஒன்றை எழுதினார். தாலிபான்களை எதிர்த்து கேட்ட சார்லேட், தற்போது தனுத சொந்த நாடான நியூசிலாந்து அரசை விமர்சித்து கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. தான் 59 ஆவணங்களை கொடுத்தும் அனுமதி கிடைக்கவில்லை. மே மாதத்தில் பெண் குழந்தை பிறக்கவுள்ளது. ஆப்கனில் குழந்தை பெறுவது மரண தண்டனைக்கு சமம் என்று கூறியுள்ளார். அவரது நிலையை கண்டு அந்நாட்டு மக்களும் கவலையடைந்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கடைசிப்போட்டி.. மைதானத்துலயே கண்கலங்கிய ராஸ் டெய்லர் - பரவும் நெகிழ்ச்சி வீடியோ..!
- சிக்ஸரே அடிக்கல.. ஆனா ஒரே பந்துல 7 ரன்... டெஸ்ட் போட்டியில் மிரள வெச்சிருச்சுப்பா நியூசிலாந்து..!
- ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் கைமாறிய குழந்தை... நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் குடும்பத்துடன் இணைப்பு!
- நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு... 3000 லிட்டர் மதுபானத்தை சாக்கடையில் ஊற்றிய தாலிபான்கள்..!
- கிரிக்கெட் வரலாற்றிலேயே மோசமான DRS ரிவ்யூ இதுதான் - வங்க தேசத்தை வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!
- மது பிரியர்களுக்கு ஆப்கானிஸ்தானில் பெரிய ஆப்பு... அதிர வைத்த தாலிபான்களின் ஒற்றைச் செயல்..!
- '6 மணி செய்தி' வாசிப்பாளராக பணியில் சேர்ந்த பெண்! ஒரே நாளில் உலக ஃபேமஸ்.. இதுதான் காரணம்!!!
- ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியது ஏன்? சில நிமிடங்களில் எடுக்கப்பட்ட முடிவு.. விளக்கம் அளித்த அஷ்ரஃப் கனி
- என்ன கொடுமை அஜாஸ் படேல்! 10 விக்கெட் எடுத்தும் பயனில்லையே ராஜா!
- 'அறிவிப்பு' வந்த உடனே 'பாஸ்போர்ட்' அலுவலகத்தில் குவிந்த ஆப்கான் மக்கள்...! - இரவு பகல் பாராமல் 'நீண்ட' வரிசையில் காத்திருப்பு...!