என்ன மனசு சார் உங்களுக்கு.. NFT மூலமாக கிடைச்ச கோடிக்கணக்கான பணம்.. ஜானி டெப் வெளியிட்ட அறிவிப்பால் நெகிழ்ந்துபோன நெட்டிசன்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரான ஜானி டெப் NFT மூலமாக தனக்கு கிடைத்த கோடிக்கணக்கான பணத்தை 4 சிறுவர்கள் மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளார். இதில் அவரது முன்னாள் மனைவியுடன் தொடர்புடைய மருத்துவமனையும் ஒன்றாகும்.
ஜானி டெப்
1984 ஆம் ஆண்டு திரைத்துறைக்குள் கால் பதித்த ஜானிக்கு உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுத்தந்தது பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் சீரிஸின், 'ஜாக் ஸ்பாரோ' என்ற கதாபாத்திரம் தான். ஹாலிவுட் வட்டாரத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக கருதப்படும் ஜானி டெப்பிற்கும் நடிகை ஆம்பர் ஹெர்ட்டுக்கும் காதல் மலர்ந்தது. இதனையடுத்து 2015 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், அடுத்த 15 மாதங்களில் ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
மீண்டும் வழக்கு
இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு ஆம்பர் ஹெர்ட் எழுதிய ஒரு கட்டுரையில் குடும்ப வன்முறையால் தான் பாதிக்கப்பட்டதாகவும், குடும்பத்தில் பெண்களுக்கு நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் குறித்தும் ஆம்பர் எழுதியிருந்தார். இந்த கட்டுரையில் ஜானி டெப்பின் பெயரை ஆம்பர் குறிப்பிடவில்லை. ஆனாலும், இந்தக் கட்டுரை வெளியான சில நாட்களில் பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் படத்தின் 6-வது பாகத்திலிருந்து ஜானி டெப் நீக்கப்பட்டது ஹாலிவுட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
வெற்றி
இந்நிலையில், தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக ஆம்பர் ஹெர்ட் மீது வழக்கு தொடர்ந்தார் ஜானி டெப். உலகம் முழுவதிலும் இருந்து பலராலும் நேரலையாக பார்க்கப்பட்ட இந்த வழக்கின் விசாரணை கடந்த வாரம் முடிவடைந்தது. இதில், ஜானி டெப்பிற்கு ஆதரவாக நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதன்மூலம், ஜானி டெப்பிற்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகையை இழப்பீடாக வழங்கும்படி ஆம்பர் ஹெர்ட்டுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
NFT
இந்நிலையில், ஜானி டெப் தனது Never Fear Truth NFT பிளாட்பார்ம் மூலமாக கிடைத்த 8 லட்சம் அமெரிக்க டாலர்களை 4 சிறுவர்கள் மருத்துவமனைகளுக்கு அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். அதன்படி இந்த தொகை, பெர்த் குழந்தைகள் மருத்துவமனை அறக்கட்டளை, கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனை குழந்தைகள் தொண்டு நிறுவனம், தி ஃபுட்பிரின்ட் கூட்டமைப்பு மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸின் குழந்தைகள் மருத்துவமனை ஆகியவற்றிற்கு பகிர்ந்து அளிக்கப்பட இருக்கிறது.
இதில் லாஸ் ஏஞ்சல்ஸின் குழந்தைகள் மருத்துவமனை ஜானி டெப்பின் முன்னாள் மனைவியான ஆம்பர் ஹெர்ட்டுடன் நெருங்கிய தொடர்புடையது. இதனையடுத்து ஜானி டெப்பின் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "நான் பட்ட கஷ்டம் யாருக்கும் வரகூடாது.." 10 வருஷமா துடைப்பம் வித்த காசு.. 100 வயசு'லயும் சபாஷ் போட வைத்த முதியவர்
- BitsCrunch என்பது என்ன..? எந்த வகையில் அது உங்களுக்கு பயன்படுகிறது.?
- இதுக்காகவா 22 கோடி.. டிவிட்டரின் முதல் மெசேஜ் NFT ஐ வாங்கிய தொழிலதிபருக்கு வந்த சோதனை.. இப்போ இவ்வளவு இறங்கிடுச்சே..!
- செல்ஃபி'ய வித்தே 7 கோடி ரூபா சம்பாதிச்சுட்டாப்ல.. VIP'க்களை சோதித்த கல்லூரி மாணவன்.. அப்படி என்னய்யா இருக்கு அதுல?
- ஒரே ஒரு 'புள்ளிய' மாத்த போய்... 'லம்பா 2.28 கோடி ரூபாய் கைவிட்டு போயிடுச்சே...' நடந்தது என்ன...?
- VIDEO : ஒரே நேரத்துல,,.. 'ரெஸ்டாரண்டோட மொத்த மெனுவையும் 'காலி' பண்ணிட்டாரு,.. 'Foodie' இளைஞரின் வைரல் 'வீடியோ'... காரணம் இது 'தான்'!!!
- 'இந்தியாவைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களுக்காக'... 'கூகுள் சுந்தர் பிச்சையின் மனம் நெகிழ வைக்கும் செயல்'!
- ‘மேட்டுப்பாளையம் விபத்து’!.. ‘இறந்த குழந்தைகளின் கண்களை தானமாக கொடுத்த தந்தை’.. உருகவைத்த சம்பவம்..!
- ‘அப்பவே இத முடிவு செஞ்சிட்டேன்’!.. ‘பிறந்த 3 மணிநேரத்தில் இறந்த குழந்தை’.. தாயின் உருக்கமான பதிவு..!