பேரழிவை சந்திக்க ரெடியா? முடிஞ்சா 'அந்த நாட்டுக்கு' போங்க பார்க்கலாம்.. ரஷ்யாவிற்கு எச்சரிக்கை விடுத்த ஜோ பைடன்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்கா: அமெரிக்க அதிபர் ஜோபைடன் ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமித்தால் அது அந்நாட்டிற்கு பேரழிவாக இருக்கும்  என காட்டமாக கண்டித்துள்ளார்.

Advertising
>
Advertising

உக்ரைன் நாட்டிற்கும், ரஷ்யவிற்கும் பணிப்போர்:

பல ஆண்டுகளாகவே உக்ரைன் நாட்டிற்கும், ரஷ்யவிற்கும் பணிப்போர் நடந்து வருகிறது. இதில் ரஷ்யா அத்துமீறி உக்ரைன் நாட்டை ஆக்கிரமிக்க பல வழிகளில் முயற்சி எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் பல நாடுகள் அடிக்கடி ரஷ்யாவை எச்சரிக்கும் விதமாக தங்கள் கண்டனங்களை வெளியிட்டு வருகிறது. அதில் அமெரிக்கா அடிக்கடி கண்டன அறிக்கைகள் வெளியிடுவது வாடிக்கை.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிபராகி ஒரு வருடம் ஆகிய நிலையில் தலைநகர் வாஷிங்டனில் தான் ஓராண்டு நிறைவை முன்னிட்டு செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேசினார்.

பொருளாதாரத்தில் கடுமையான இழப்புகள் ஏற்படும்:

அதில், 'ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமித்தால் அது பேரழிவாக இருக்கும். ரஷ்யா தன்னுடைய நடைமுறைகளை மாற்றவிட்டால் அது தன் பொருளாதாரத்தில் கடுமையான இழப்புகள் ஏற்படும்' என தெரிவித்துள்ளார். அதோடு 600 மில்லியன் டாலர் மதிப்பிலான அதிநவீன பாதுகாப்பு உபகரணங்களை உக்ரைனைக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ரஷ்யாவிற்கு பாடம் புகட்ட பல நாடுகள் தயாராக உள்ளது

மேலும் 'ரஷ்யாவிற்கு பாடம் புகட்ட பல நாடுகள் தயாராக உள்ளது. உக்ரைனைக்குள் ரஷியா மேலும் முன்னேறினால் நான் உறுதி அளித்ததை போன்று பொருளாதார தடைகளை எதிர்கொள்ள நேரிடும். ரஷ்ய வீரர்கள் உக்ரைனைக்கு சென்றால் உடல் ரீதியான உயிரிழப்புகளையும் சந்திப்பார்கள்' என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன் மூலம் முடிந்தால் உக்ரைனை கைப்பற்றி பாருங்கள் என சவால் விடும் தொனியில் ஜோ பைடன் எச்சரித்து உள்ளார்.

நேட்டோ கூட்டாளி நாடுகளும் பெரும் பொருளாதார தடைகளை விதிக்கும்:

இதனிடையே உக்ரைன் எல்லையில் ரஷ்யா 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை குவித்து உள்ளதாகவும் உக்ரைனை ஆக்கிரமித்தால் ரஷ்யா மீது அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டாளி நாடுகளும் பெரும் பொருளாதார தடைகளை விதிக்க உள்ளதாகவும் தெரிகிறது. இது உலக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

JOE BIDEN, UKRAINE, RUSSIA, ரஷ்யா, உக்ரைன், ஜோ பைடன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்