அதிபராகும் ஜோ பைடன்!.. இந்தியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!.. ஒரே கல்லில் 2 மாங்காய்!.. வெளியான பரபரப்பு தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்டு அமெரிக்க துணை அதிபராக தெரிவு செய்யப்பட்டது இந்திய மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்தியர்களை மேலும் உற்சாகப்படுத்தும் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஹெச் 1 பி விசாக்களுக்கு நாடுவாரியாக நிர்ணயிக்கப்பட்டிருந்த வரம்பு விலக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்த குடியேற்றக் கொள்கையால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான இந்தியர்கள் பயனடைவர்.

அமெரிக்கர்களுக்கான வேலை வாய்ப்பை உறுதிப்படுத்துவதாகக் கூறி ஹெச் 1 பி உள்ளிட்ட வேலை பார்ப்பதற்கான விசாவை தற்காலிகமாக டிரம்ப் நிறுத்தி வைத்தார். மேலும், அந்த விசாவுடன் பணிபுரிவோருக்கு வழங்கப்படும் சம்பளத்தை உயர்த்தியதன் மூலம் நிறுவனங்களுக்கு மறைமுகமாக நெருக்கடி தரப்பட்டது.

இதனால் கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்ற பெருநிறுவனங்கள் ட்ரம்ப் அரசு மீது அதிருப்தியுற்றன.

ஹெச் 1 பி விசா தடையை நீக்கக் கோரி வழக்கு தொடுக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்று கூறி பைடன் அரசு புலம்பெயர்ந்தோரை நாட்டில் அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், புலம்பெயர்ந்த, ஆவணமற்ற 1.10 கோடி பேருக்கு குடியுரிமை வழங்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் இதன் மூலம் 5 லட்சம் இந்தியர்கள் பயனடைவர் என்றும் கூறப்படுகிறது.

ஆண்டு ஒன்றுக்கு 95,000 அகதிகளை அமெரிக்காவிற்குள் அனுமதிக்க பைடன் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்