‘90 நாளுக்குள் ரிப்போர்ட் கைக்கு வரணும்’!.. அமெரிக்க உளவுத்துறைக்கு புது அசைன்மென்ட்.. அதிபர் ஜோ பைடன் அதிரடி..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க அதிகபர் ஜோ பைடன் அந்நாட்டு உளவுத்துறைக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

சீனாவின் வூகான் மாகாணத்தில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 16-க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 34 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா பரவலை தடுக்க கடுமையாக போராடி வருகின்றன.

முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது, சானிடைசர் உபயோகிப்பது என பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி செலுத்தி வரும் நாடுகளில் பாதிப்பு சற்று குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்பதை கண்டுபிடித்து அறிக்கையை 90 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும் என அமெரிக்க உளவுத்துறைக்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதனை இரட்டிப்பு வேகத்தில் செய்து முடிக்கும்படி அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் உளவுத்துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி அமெரிக்காவின் மருத்துவ ஆய்வுக் கூடங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளையில் சீனாவின் ஆய்வுக் கூடத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியது என கூறப்படுவது குறித்தும் விசாரிக்க ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதனால் சர்வதேச விசாரணைகளுக்கு சீனா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்