'அடிச்சாரு பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர்'... 'பதவி ஏற்றதும் செய்யப்போகும் முதல் வேலை'... உற்சாகத்தில் அமெரிக்கர்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனாவால் ஒரு கோடிக்கும் மேலான அமெரிக்கர்கள் வறுமையில் வாடும் நிலையில், அவர்களுக்கு எல்லாம் ஜோ பைடனின் அறிவிப்பு உற்சாகத்தை அளித்துள்ளது.

உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலிருந்து வருகிறது. அதோடு அங்கு வைரஸ் தொற்றால் நிகழும் மரணங்களும், வேலையில்லா திண்டாட்டமும் உச்சத்தில் உள்ளது. இதற்கு அதிபர் ட்ரம்பின் மோசமான நிர்வாகமே காரணம் என்ற, பரவலான குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே தற்போதைய ஜனாதிபதி டிரம்பைவிட சிறப்பான முறையில் கொரோனா வைரஸ் பிரச்சினையைக் கையாளுவேன் என்ற பிரசாரத்தின் மூலம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வருகிற 20-ந்தேதி பதவி ஏற்க உள்ளார். இதனால் ஜோ பைடன் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே பரவலாகக் காணப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா தொற்றின் தாக்கத்திலிருந்து அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்க 1.9 லட்சம் அமெரிக்க டாலர் செலவிடுவதற்கான திட்டத்தை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார். இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.138 லட்சத்து 811 கோடியாகும். இந்த திட்டத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் கொடுக்குமானால், இதன் மூலம் ஒவ்வொரு அமெரிக்கரும் தலா 1,400 டாலர் (சுமார் ரூ.1 லட்சம்) நிதியுதவி பெறுவார்கள் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக ஒரு கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வேலையை இழந்து வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தலா 1 லட்சம் (1,400 டாலர்) வழக்கும் ஜோ பைடனின் திட்டம், அமெரிக்கர்கள் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு கொரோனாவால் வேலை இழந்தவர்களுக்கு வாரம் தோறும் வழங்கப்படும் நிவாரண தொகை 300 டாலரில் (சுமார் ரூ.21 ஆயிரம்) இருந்து 400 (சுமார் ரூ.29 ஆயிரம்) டாலராக உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்