'அமெரிக்க அதிபர் தேர்தல்'... 'ஒபாமா' செய்த இமாலய சாதனையை முறியடித்த ஜோ பைடன்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்கத் தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையே கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில், ஒபாமாவின் சாதனையை முறியடித்து அசத்தியிருக்கிறார் ஜோ பைடன்.
அமெரிக்க அதிபர் தேர்தல், ஒரு தெளிவான நிலையை எட்டுவதற்கு சில நாட்கள் ஆகலாம் என்ற நிலையில், டொனால்டு டிரம்ப்- ஜோ பைடன் இடையில் போட்டி, மிகக் கடுமையாகவே இருக்கிறது. தேர்வுக்குழு வாக்குகள் மற்றும் முன்னிலை நிலவரங்களின் அடிப்படையில் இருவருக்கும் பெரிய இடைவெளி இல்லை என்பதால் வெற்றியாளர் யார் என்பதைக் கணிக்க முடியாத சூழல் நிலவியது. நேற்றைய நிலவரப்படி பைடன் 238 தேர்வுக்குழு வாக்குகளையும், டிரம்ப் 213 வாக்குகளையும் பெற்றிருந்தார்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக டிரம்ப் முன்னிலை வகித்து வந்த விஸ்கான்சின் மற்றும் மிச்சிகன் ஆகிய மாகாணங்கள் பைடனுக்கு சாதகமாக மாறின. விஸ்கான்சினின் 10 வாக்குகள் மற்றும் மிச்சிகனின் 16 வாக்குகளைப் பெற்ற பைடன் மொத்தம் 264 வாக்குகளைப் பெற்று வெற்றியை நெருங்கியுள்ளார். இதனிடையே தற்போது ஜோ பைடன் பெற்றுள்ள வாக்குகள் 70,298,271 எனப் பதிவாகியுள்ளது. இது 2008ம் ஆண்டு முந்தைய அதிபர் பாராக் ஒபாமா பெற்ற 69,498,516 என்ற சாதனையை முறியடித்துள்ளது.
தற்போதைய அதிபர் டிரம்ப் இதுவரை 67,567,559 வாக்குகள் பெற்றுள்ளார். இது 2016ம் ஆண்டு அவர் பெற்ற வாக்குகளை விட அதிகமாகும்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அமெரிக்க அதிபர் தேர்தலில் கடும் போட்டி’...!! ‘தொடர்ந்து முன்னிலை வகிப்பது யார்?’... வாக்குகள் எண்ணிக்கை விறுவிறுப்பு...!!! அமெரிக்க வாழ் தமிழர்கள் பகுதியில் யாருக்கு செல்வாக்கு???
- இந்த ‘கொரோனா’ எல்லாத்தையும் வெளிச்சம் போட்டு காட்டிருச்சு.. பகிரங்கமாக விமர்சித்த ‘ஒபாமா’.. அதுக்கு டிரம்ப் சொன்ன பதில்..?
- ‘சொந்தமாக்கி கொள்ள முயற்சி செய்கிறது’... ‘சீனாவுக்கு பகிரங்கமாக’... ‘எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா’!
- 'அமெரிக்காவை' இருளிலிருந்து 'இவர்' காப்பாற்றுவார்... முன்னாள் 'அதிபர்' பராக் ஒபாமா 'ஆதரவு'...
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!