எல்லாமே துல்லியமா 'அட்டேக்' பண்ற அதிநவீன ஆயுதங்கள்...! 'இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பல ஆண்டுகளாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக நில ஆக்கிரமிப்பு சம்பந்தமாக மோதல்கள் நிலவி வருகிறது. தற்போது மீண்டும் தாக்குதல்கள் தொடங்கியுள்ள நிலையில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு 5 ஆயிரத்து 381 கோடி ரூபாய்க்கு ஆயுதங்களை விற்பனை செய்ய ஜோ பைடன் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாலஸ்தீனம், காசா முனை மற்றும் மேற்கு கரை என்று மொத்தம் இரண்டு பகுதிகளாக உள்ளது. காசா முனையை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதி இருவரும் ஒருவருக்கு ஒருவர் சலிக்காமல் ஏவுகனைகளை ஏவி வருகிறது.

இதில் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில் கேராளாவை சேர்ந்த சௌமியா என்ற பெண் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். காசா முனையில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால், இருத்தரப்பினரும் சண்டையை நிறுத்துமாறு அமெரிக்க உள்பட உலக நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இதையெல்லாம் சொல்லிவிட்டு மீண்டும் அமெரிக்காவின் ஜோ பைடன் தலைமையிலான அரசு, 735 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான அதிநவீன ஆயுதங்களை இஸ்ரேலுக்கு  விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இஸ்ரேலுக்கு தன்னை தற்கொள்ள உரிமை உள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது இந்திய மதிப்பில் சுமார் 5 ஆயிரத்து 381 கோடியே 22 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் ஆகும். இந்த ஆயுத விற்பனை குறித்த அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பிரபல செய்திநாளிதழான 'வாஷிங்டன் போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆயுத விற்பனை காசாவில் இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்த பயன்படுத்தப்படலாம் என்று பல தரப்பினரும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்