காதலியை பிடிச்சுட்டு மலையில் இருந்து குதித்த காதலன்.. "அவரு சொன்ன கடைசி வார்த்தை'ய கேட்டு.." உறைந்து போன நண்பர்கள்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

காதலியை இழுத்துக் கொண்டு பாறையில் இருந்து காதலன் ஒருவர் குதிப்பதற்கு முன்பாக சொன்ன வார்த்தைகள், அங்கிருந்த அவரது நண்பர்களை திடுக்கிட வைத்துள்ளது.

Advertising
>
Advertising

துருக்கி நாட்டின் Tekirdag என்னும் மாகாணத்திலுள்ள Marmara Ereglisi என்னும் பகுதியை சேர்ந்தவர் Selcuk Cetiner. இவர் நில உரிமையாளராக இருந்து வந்த நிலையில், பியூட்டிஷியனான Mehlika என்ற பெண்ணை அவர் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக, தங்கள் நண்பர் ஒருவரின் பிறந்த நாள் விழாவுக்கு ஒன்றாக இணைந்து சென்றுள்ளனர். அப்போது, அங்கே வேறு சில நண்பர்களும் பிறந்தநாள் விழாவுக்கு வந்திருந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, அவர்கள் அனைவரும் அங்கே உணவருந்தி விட்டு, அருகிலுள்ள மலை உச்சி பகுதி ஒன்றிற்கும் சென்றுள்ளனர். அப்போது, Selcuk மற்றும் Mehlika ஆகியோருடன் வேறு சிலரும் இருந்துள்ளனர். இதற்கு மத்தியில், திடீரென Selcuk, Mehlika ஆகிய இருவரும் சண்டை போட தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. பொறாமையின் பெயரில், இந்த மோதல் ஆரம்பித்ததாக கூறப்படும் நிலையில், நேரம் செல்ல செல்ல இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும், இருவரையும் அங்கிருந்தவர்கள் பிரித்து விடவும் செய்துள்ளனர். அப்படி ஒரு சூழ்நிலையில், அவர்களின் நண்பர்கள் யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் அங்கே அரங்கேறி உள்ளது. அந்த பகுதியில் இருந்து தனது காதலியை இடுப்பை சுற்றி பிடித்த படி, கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டு Mehlika எதிர்பார்ப்பதற்கு முன்பாக அந்த குன்றில் இருந்து கீழே குதிக்கவும் செய்துள்ளார் Selcuk.

இதனைக் கண்டதும், அவரது நண்பர்கள் அனைவரும் பதறி போகவே, Selcuk சொன்ன கடைசி வார்த்தை தான் அவரை இன்னும் திகிலூட்டி உள்ளது. அதாவது, காதலியை பற்றிக் கொண்டு தான் குதிக்கும் போது, கூட இழுத்து செல்வதற்கு முன்பாக, "நாம் இறப்பதாக இருந்தால் ஒன்றாக இறப்போம்" என Selcuk கத்தி உள்ளார்.

Selcuk மற்றும் Mehlika ஆகியோர், மலையில் இருந்து விழுந்த நிலையில், சுமார் 82 அடி கீழே விழுந்து உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது பற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், சம்மந்தப்பட்ட இடத்திற்கு வந்து இருவரின் உடலையும் மீட்டுச் சென்றனர். தொடர்ந்து, அவர்களின் செல்போன்களையும் கைப்பற்றி, இதற்கான காரணம் குறித்து விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர்.

BOY FRIEND, TURKEY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்