"பால் மற்றும் தேன்-ல தான் குளியல்.. தங்கத்துல தேன் ரப்பர்"..ஒரு வயது மகனுக்கு லட்சக்கணக்கில் செலவு.. மிரள வைக்கும் தாய்ப்பாசம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரிட்டனை சேர்ந்த தாய் ஒருவர் தன்னுடைய மகனுக்காக லட்சக்கணக்கில் செலவு செய்துவருவது பலரையும் திகைப்படைய வைத்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | "அதே பிராட் ஓவர்.." அன்னைக்கி யுவராஜ் சிங், இன்னைக்கி பும்ரா.. ஒரே ஓவரில் நடந்த உலக சாதனை.. மிரண்டு போன கிரிக்கெட் ரசிகர்கள்

தங்களது குழந்தைகளை வாழ்வின் மையமாக கருதுகிறார்கள் ஒவ்வொரு பெற்றோரும். அவர்களை வளர்க்க, ஏராளமான சிரமங்களை சந்திக்கும் பெற்றோர்களை நாம் சந்தித்திருக்கிறோம். ஆனால், இங்கிலாந்தை சேர்ந்த கேசி அக்ரம் தனது மகனுக்காக செலவழிப்பதை பலரும் மிரட்சியுடன் பார்த்துவருகிறார்கள்.

இங்கிலாந்தின் தெற்கு யார்க்ஷயரில் உள்ள ஷெஃபீல்டு பகுதியைச் சேர்ந்தவர் கேசி அக்ரம். 32 வயதான கேசியின் மகன் ஜரீம். தற்போது ஜரீமிற்கு 1 வயது ஆகிறது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் கேசி தனது மகனுக்கு லட்சக்கணக்கில் வசித்து வருகிறார். தன்னுடைய மகன் விரும்பும் சிறிய பொருட்கள் கூட அவனுக்கு கிடைக்க வேண்டும் என தான் விருப்பப்படுவதாக கூறுகிறார்.

பால் குளியல்

வாரத்திற்கு இரண்டு முறை ஜரீமை குளிக்க வைக்கும் கேசி, அதற்காக பால் மற்றும் தேனை பயன்படுத்துவதாக தெரிவித்திருக்கிறார். அதன்பிறகு மசாஜ், விலையுயர்ந்த எண்ணெய்களை உபயோகிப்பதாக கூறும் கேசி,"எனது மகனுக்கு நான் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் மிகவும் தரமானதாக இருக்கவேண்டும் என விரும்புகிறேன்" என்றார். 

தனக்கு பிற உலோகங்களை உபயோகித்தால் அலர்ஜி வரும் எனக் கூறும் கேசி," எனக்கு தூய தங்கத்தை தவிர்த்து பிற அனைத்து உலோகங்களும் அலர்ஜியை உருவாக்கும். அதனால் எனது மகனுக்கும் அப்படி சிக்கல் இருக்கும் என நினைத்தேன். ஆகவே, அவனுக்கு தங்கத்தில் தேன் ரப்பர் வாங்கினேன்" என்றார்.

செலவு

மாடலாகவும், நடிகையாகவும் இருந்த கேசி தற்போது தனது பணிகளில் இருந்து விலகி முழுவதுமாக ஜரீனை பார்த்துக்கொள்கிறார். செலவுகள் குறித்து பேசுகையில்,"எனது மகனது செலவுகளுக்கு நான் எவ்வளவு கஷ்டப்படவும் தயாராக இருக்கிறேன். அவனுக்கு வாங்க வேண்டிய பொருட்களுக்கான பணம் என்னிடம் இல்லை என்றால் அவனுடைய தந்தைக்கு போன் செய்வேன். உடனடியாக பணம் கிடைத்துவிடும்" என்கிறார்.

தொண்டு நிறுவனங்கள் நடத்தும் கடைகளில் தனக்கு உடைகள் வாங்கிக்கொள்ளும் கேசி, ஜரீனுக்கு 50 யூரோ மதிப்பில் ஒரு டி-ஷர்ட்டை வாங்குவதாக கூறுகிறார். இதுபற்றி அவர் கூறுகையில்,"எனது மகன் விருப்பப்படும் அனைத்தும் அவனுக்கு கிடைக்க வேண்டும். அதுவே எனது வாழ்க்கையின் முக்கிய கடமையாக கருதுகிறேன்" என்றார்.

Also Read | இது நாயா? பூனையா?.. நெட்டிசன்களை குழப்பும் புகைப்படங்கள்.. உண்மையை வெளியே சொன்ன உரிமையாளர்..!

BRITAIN, PAMPERED TODDLER BATHES, TODDLER BATHES IN MILK AND HONEY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்