ஆபீஸ்லயே இனி தூங்கலாம்.."தொழிலாளர்களின் Health தான் முக்கியம்"..முன்னணி நிறுவனம் கண்டுபிடிச்ச "தூங்கும் பெட்டி".. அட இது நல்லாருக்கே..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஜப்பானில் ஊழியர்கள் தங்களது பணி நேரத்தில் ஓய்வெடுக்க வசதியாக தூங்கும் பெட்டியை உருவாக்கியுள்ளது நிறுவனம் ஒன்று. இது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | கீழ கிடந்த ஒரு டாலர்... ஆசையா எடுத்த பெண்ணின் உடலில் ஏற்பட்ட மாற்றம்.. டாக்டர்கள் சொன்னதை கேட்டு மிரண்டுபோன கணவர்..!

உலகம் முழுவதும் பல்வேறு நேரங்களில் நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. உதாரணமாக வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே பணிநாட்களை கொண்டிருக்கும் நாடுகள் இருக்கின்றன. அதே நேரத்தில் வாரத்தில் 6 நாட்களும் ஊழியர்களை பணிபுரியும்படி வலியுறுத்தும் நாடுகளும் இருக்கின்றன. குறிப்பாக உழைப்புக்கு பெயர்போன ஜப்பானியர்கள் ஒரு நாளில் அதிக மணிநேரங்கள் இடைவிடாது உழைக்கின்றனர். இயல்பாகவே, இப்படி கடினமாக உழைக்கும் இந்நாட்டவர்களை கொஞ்சம் மகிழ்ச்சிப்படுத்த நினைத்திருக்கிறது உள்ளூர் நிறுவனம் ஒன்று.

தூக்கம்

ஏனெனில், தூக்கத்தை தொலைத்து அதிகநேரம் பணிபுரிபவர்கள் ஏராளமான உடல் மற்றும் மன ரீதியான சிக்கல்களை எதிர்கொள்வதாக எச்ச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக மனிதர்களின் தூக்கம் குறையும் வேளையில், மன அழுத்தம் அதிகரிக்கலாம் எனவும் மன நல மருத்துவர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.

இதனை கருத்தில்கொண்டு இடோகி மற்றும் கொயோஜு ப்ளைவுட் கார்ப்பரேஷன் தூங்கும் பெட்டியை உருவாக்கியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவை தலைமையிடமாகக்கொண்டு இயங்கிவரும் இந்த நிறுவனம், அதிக நேரம் பணிபுரியும் நபர்கள் தங்களது வேலைகளுக்கு இடையே இந்த பெட்டிக்குள் சென்று குட்டித்தூக்கம் போட்டுக்கொள்ளலாம் என தெரிவித்திருக்கிறது. மேலும், இதற்கு Kamin Box (கமின் பாக்ஸ்) என அந்த நிறுவனம் பெயரிட்டிருக்கிறது.

இதுகுறித்து பேசிய அந்த நிறுவனத்தின் தகவல் தொடர்பு அதிகாரி சாகோ கவாஷிமா,"பணிநேரங்களில் குட்டித்தூக்கம் போட விரும்புபவர்களுக்கு இந்தப்பெட்டி தீர்வை வழங்குகிறது. ஜப்பானில் பெரும்பாலான பணியாளர்கள் குளியலறைக்கு சென்று கதவை தாழிட்டுக்கொள்வார்கள். உள்ளே அவர்கள் சிறிதுநேரம் தூங்கி எழுந்த பின்னர் தங்களது வேலைகளை தொடர்வார்கள். அது ஆரோக்கியமானதில்லை என்று நான் நினைக்கிறேன். வசதியான இடத்தில் தூங்குவது நல்லது" என்றார்.

ஓய்வு

வேலை செய்யும் இடங்களில் ஊழியர்களுக்கு ஓய்வு கிடைக்க வேண்டும் எனக்கூறிய அவர்,"நிறைய ஜப்பானியர்கள் இடைவேளையின்றி தொடர்ந்து வேலை செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். நிறுவனங்கள் இதை ஓய்வெடுப்பதற்கான வசதியான அணுகுமுறையாகப் பயன்படுத்தலாம் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

இருப்பினும், இந்த பெட்டிக்குள் ஊழியர்கள் நின்றபடி மட்டுமே தூங்க முடியும். ஆகவே, இது எப்படி சாத்தியம் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

Also Read | ராணுவ வீரரின் காலை தொட்டு வணங்கிய சிறுமி.. MP பகிர்ந்த நெகிழ்ச்சியான வீடியோ..!

JAPANESE, JAPANESE COMPANY, DEVELOPS, NAP BOXES, OFFICE WORKERS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்