கடல், மணல் அப்புறம் பனி.. எல்லாம் ஒரே இடத்துல.. இணையத்தை மீண்டும் ஆக்கிரமித்த போட்டோ.. எங்கப்பா இருக்கு இந்த இடம்.?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடல், மணல் மற்றும் பனி ஆகியவை சந்திக்கும் இடத்தின் புகைப்படம் இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது. இது எங்கப்பா இருக்கு என நெட்டிசன்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertising
>
Advertising

Also Read | சிறுவனுக்காக ஏக்கத்துடன் காத்திருந்த நாய்க்குட்டி.. வந்த உடனே ஆட்டத்தை பார்க்கணுமே..😍 ஹார்ட்டின்களை குவிக்கும் வீடியோ..!

இணையத்தின் வளர்ச்சியால் சமூக வலை தளங்களின் வீச்சு தற்போது அதிகரித்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். எளிதில் கவனத்தை ஈர்க்கும் விஷயங்கள் சமூக வலை தளங்களில் கண்ணிமைக்கும் நேரத்தில் வைரலாகி விடுவது உண்டு. குறிப்பாக மக்களின் மனதை கவரும் சம்பவங்கள் இணையத்தில் மிகப்பெரும் வரவேற்பை பெற தவறுவதில்லை. அப்படியான புகைப்படம் ஒன்றுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் ஒருபுறம் பனியும் நடுவே மணல் பரப்பும் மற்றொரு புறத்தில் கடலும் இருக்கின்றன. கடந்த வருட ஜனவரியில் முதன் முதலாக இந்த புகைப்படம் இணையத்தில் பதிவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பார்ப்பதற்கு ஏதோ கிராபிக்ஸ் போலவே இருப்பதால் இது எடிட் செய்யப்பட்ட புகைப்படமா? இந்த இடம் எங்கே இருக்கிறது? என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். ஆனால் உண்மையாகவே இப்படி ஒரு இடம் இருக்கிறது. ஜப்பானில் உள்ள கடற்கரை ஒன்றில் தான் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

மேற்கு ஜப்பானில் அமைந்துள்ள San'in Kaigan UNESCO குளோபல் ஜியோபார்க்கில் இந்த கடற்கரை அமைந்திருக்கிறது. தற்போது இந்த புகைப்படத்தை ஹிஸா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுவரையில் இந்த புகைப்படத்தை 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்திருக்கின்றனர். இப்புகைப்படத்தை பார்த்துவிட்டு,"மாயாஜால தன்மை வாய்ந்த புகைப்படம்" எனவும் "நான் பார்த்ததிலேயே மிகவும் அழகிய கடற்கரை இதுதான்" எனவும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டுவருகின்றனர்.

Also Read | என்ன வாய்ஸ்-டா சாமி.. அசத்திய அரசுப்பள்ளி மாணவன்.. பள்ளிக்கல்வி துறை பகிர்ந்த சூப்பர் வீடியோ..!

JAPANESE, BEACH, JAPANESE BEACH, SNOW, SAND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்