ஒரு ரீட்வீட்டிற்கு ‘லட்சங்களில்’ பரிசு... இன்ப ‘அதிர்ச்சி’ கொடுத்த... ‘தொழிலதிபர்’ சொன்ன ‘வேறலெவல்’ காரணம்...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஜப்பான் தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய ட்வீட்டை ரீட்வீட் செய்தவர்களில் 1000 பேருக்கு தலா ரூ 6.5 லட்சம் கொடுத்துள்ள சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த பிரபல நிறுவனமான சோசோ ஆன்லைன் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி யூசகு மேசவா. கோடீஸ்வரரான யூசகு ஏற்கெனவே தன்னுடைய வித்தியாசமான முயற்சிகளால் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதற்கு முன்னதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் நிலவுக்கு ட்ரிப் செல்ல பல கோடிகளைக் கொடுத்து முன்பதிவு செய்து கவனிக்க வைத்தவர். மேலும் கலைப் பொருட்கள், ஸ்போர்ட்ஸ் ரக கார்கள் ஆகியவற்றை அதிக விலை கொடுத்து வாங்கி சேர்ப்பது போன்ற இவருடைய செயல்களாலும் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளவர்.

இந்நிலையில் தற்போது ஒரு புதிய முயற்சியின் மூலம் யூசகு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். கடந்த மாதம் யூசகு வெளியிட்ட அறிவிப்பில், “ஜனவர் 1ஆம் தேதி நான் பதிவிடும் ட்வீட்டை ரீட்வீட் செய்பவர்களில் 1000 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ரூ 6.5 லட்சம் (இந்திய ரூபாய் மதிப்பில்) பரிசு வழங்கப்படும். இந்தப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் 1000 பேர் குறித்து 7ஆம் தேதி அறிவிக்கப்படும். நான் ஏன் இவ்வாறு செய்கிறேன் என்பதை யூட்யூப் வீடியோ மூலமாக தெரிவிக்கிறேன்” எனக் கூறியிருந்தார்.

அதன்படியே தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 பேருக்கு அவர் பரிசுத் தொகையையும் அளித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “இந்தப் பணம் அந்த குறிப்பிட்ட நபர்களை எவ்வளவு மகிழ்ச்சியாக்குகிறது என்பதை அறியவே இந்த முயற்சி. அவர்களின் மீது இந்த பணத்தின் தாக்கம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார். யூசகுவின் அறிவிப்பைத் தொடர்ந்து அவருடைய ட்வீட்டை மொத்தமாக 41 லட்சம் பேர் ரீட்வீட் செய்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

TWITTER, MONEY, JAPAN, BILLIONAIRE, YUSAKUMAEZAWA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்