'தடுப்பூசி பாட்டில்ல என்னமோ மிதக்குது பாருங்க'!.. உடனே ஆய்வுக்கு அனுப்பட்ட மருந்து!.. 'அய்யோ 'இத' எத்தனை பேருக்கு போட்டுறுகீங்க'?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஜப்பான் நாட்டிலும் பைசர், மாடர்னா உள்ளிட்ட சில தடுப்பூசிகள் மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது.

சில தினங்களுக்கு முன் ஸ்பெயினிலிருந்து ஜப்பானுக்கு மூன்று பேட்ச்களாக (BATCH) மாடர்னா தடுப்பூசி பாட்டில்கள் வந்தன. அதில் ஒரு பேட்ச்சில் இருந்த தடுப்பூசி பாட்டில்கள் சிலவற்றில் வித்தியாசமான துகள்கள் கலந்திருப்பதாக புகார் எழுந்தது.

இதையடுத்து மூன்று பேட்ச்களிலும் இருந்த தடுப்பூசிகளைச் செலுத்துவதை ஜப்பான் அரசு, கடந்த வியாழக்கிழமை அவசர அவசரமாக நிறுத்தியது. மேலும், தடுப்பூசி பாட்டில்களில் கலந்திருந்தது உலோக துகள்களாக இருக்கலாம் என ஜப்பானின் சுகாதாரத்துறை அமைச்சகம் சந்தேகிப்பதாக தகவல் வெளியானது.

அதைத்தொடர்ந்து, தடுப்பூசி பாட்டில்களில் துகள்கள் கலந்திருப்பதாக எழுந்த புகார்கள் குறித்து ஐரோப்பிய யூனியனின் மருந்து கட்டுப்பாட்டாளரான ஐரோப்பிய மருந்துகள் முகமை விசாரணை நடத்தி வருகிறது. அதேபோல, ஸ்பெயின் நாட்டில் மாடர்னா தடுப்பூசி மருந்தை தயாரிக்கும் ரோவி நிறுவனம் இதுகுறித்து விசாரணையை தொடங்கியுள்ளது.

இந்நிலையில், அந்த தடுப்பூசி பேட்ச்களில் இருந்த பாட்டில்களில் இருந்து தடுப்பூசி டோஸ்களை செலுத்திக்கொண்ட இருவர் உயிரிழந்துவிட்டதாக திடுக்கிடும் தகவலை ஜப்பான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அவர்கள் இருவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சில நாட்களிலேயே இறந்துள்ளதாகவும், அதேநேரத்தில் தற்போது வரை மாடர்னா தடுப்பூசிகளால் உயிரழப்பு ஏற்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை எனவும் தெரிவித்துள்ள ஜப்பான் அரசு, இருவரின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் கூறியுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்