மக்களுக்கு ‘இலவசமாக’ கொரோனா தடுப்பு மருந்தை வழங்க போகும் நாடு.. வெளியான ‘அதிரடி’ அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா தடுப்பு மருந்து நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கும் வகையிலான சட்டத்துக்கு ஜப்பான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஜப்பான் நாட்டில் கடந்த ஜனவரி மாதம் நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து வைரஸ் தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதுவரை அந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் 1,50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனால் நோய் பாதிப்பை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா தடுப்பு மருந்துகளை வழங்குவதற்கான பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை வெற்றியை கண்டுள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்கும் வகையிலான புதிய சட்டத்துக்கு ஜப்பான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய சட்டத்தின்படி ஜப்பானில் உள்ள 126 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க ஆகும் செலவை அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசரிலிருந்து 60 மில்லியன் மக்களுக்கும், பயோடெக் நிறுவனமான மாடர்னாவிலிருந்து 25 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்துகளை ஜப்பான் பெற்றுள்ளது. மேலும் 120 மில்லியன் டோஸ் ஆஸ்ட்ராசென்கா தடுப்பு மருந்தை பெறவும் அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனா 'தடுப்பூசி'க்கு உலகிலேயே அனுமதி வழங்கிய 'முதல்' நாடு!!!... அடுத்த 'வாரம்' முதல் மக்களுக்கு 'விநியோகம்'!!
- 'மரண பயத்தில்'... 'ரகசியமா கிம் ஜாங் உன் செஞ்ச காரியம்???'... 'அதுவும் சீனா உதவியோட?!!'... 'பகீர் குற்றச்சாட்டால் கிளம்பியுள்ள புது சர்ச்சை!!!'...
- 'இந்தியாவில் எல்லோருக்கும் தடுப்பூசியா???'... 'அரசு அப்படி சொல்லவே இல்லையே?!!'... 'சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளியாக வெளியான முக்கிய தகவல்!!!"...
- 'தமிழகத்தின் இன்றைய (01-12-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
- "இந்த தப்பு மட்டும் நடந்துடவே கூடாது... பலரோட உயிருக்கே ஆபத்தாகிடலாம்"... 'தடுப்பூசி விஷயத்தில் FDAவின் முக்கிய எச்சரிக்கை!!!'...
- ‘அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வேன்’!.. கொரோனா வார்டில் ‘கண்கலங்க’ முதியவர் கேட்ட கேள்வி.. நொறுங்கிப் போன மருத்துவர்..!
- கொரோனாவை பத்தி செய்தி வந்ததும் மக்கள் விழுந்து விழுந்து தேடுன ‘ஒரே’ வார்த்தை.. இந்த வருசம் அதுதான் ‘டாப்’!
- ‘100% பலனளிக்கும் கொரோனா தடுப்பூசி’... ‘அவசர பயன்பாட்டிற்கு அனுமதியுங்க’... ‘கொரோனா மருந்து தயாரிப்பு நிறுவனம்’... ‘அளித்த முக்கிய தகவல்’...!!!
- 'எல்லாரையும் டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு அனுப்பியாச்சு...' 'புதுசா யாருக்குமே பாசிடிவ் இல்ல...' - தமிழகத்தில் கொரோனா இல்லாத 'இரு' மாவட்டங்கள்...!
- 'தமிழகத்தின் இன்றைய (30-11-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!