'ஒன்னுமே எழுதாத Assignment நோட்டுக்கு அதிக மார்க் ஏன்?'... ஒரே நாளில் உலக ஃபேமஸ் ஆன மாணவி!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜப்பானைச் சேர்ந்த நிஞ்சா க்ளப்பினைச் சேர்ந்த யூஜி யமதா என்கிற தன்னுடைய ஆசிரியருக்கு, நிஞ்சா கலாச்சாரத்தை பற்றிய கட்டுரை ஒன்றை அங்கு பயிலும் மாணவி எழுதி அசைன்மெண்ட்டாக ஒப்படைக்க வேண்டும். ஆனால் அம்மாணவி ஒப்படைத்ததோ வெறும் பேப்பர்களைத்தான்.
ஆனாலும் அதிக மார்க்குகளைப் பெற்றது அந்த மாணவிதான். வெறும் பேப்பரை அசைன்மெண்ட்டில் ஒப்படைத்ததற்காகவா இப்படி அதிக மார்க்குகளை அள்ளித் தருவார்கள். யாரேனும் அப்படி செய்வார்களா? இல்லை, இது என்ன வஞ்சப்புகழ்ச்சி அணியா? என்பன போன்ற நிறைய கேள்விகள் எழலாம்.
ஆனால் ஆசிரியர் ஒருவர் மட்டுமே, மாணவி ஏய்மி ஹகா ஒப்படைத்த ரெக்கார்டு குறிப்புகளுக்குள் ஏதோ ஒன்று இருப்பதாக உணர்ந்து வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு, அதனை தீக்கனலில் படும்படி காட்டியுள்ளார். பேப்பரில் இருந்த ஒவ்வொரு எழுத்துக்களும் தெரியத் தொடங்கியுள்ளன.
அப்போது நிஞ்சா கலாச்சாரத்தைப் பற்றி அதில், அம்மாணவி எழுதிய அந்த கட்டுரை ஆசிரியரின் கண்களுக்கு புலப்பட்டுள்ளது. ஆம், இவ்வாறு மறைக்கப்பட்ட கடிதங்களும் நிஞ்சா வீரர்களின் யுத்திகளில் ஒன்று என்பதைத்தான் மாணவி தன்னுடைய அறிவாற்றலையும், அறிவியல் திறனையும் கொண்டு உருவாக்கியுள்ளார்.
அதுமட்டுமல்ல, இதைச் செய்வதற்கு மாணவிக்கு உதவியதோ சோய்பீன்ஸ் கூழ்மம்தான். அதுதான் அந்த இன்விசிபிள் எழுத்துக்களை எழுதுவதற்கு மாணவிக்கு கிடைத்த இங்க்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சிறுமி கையில் என்ன வைத்திருக்கிறார் எனத் தொடங்கிய ஏலத்தில்’.. ‘ரூ.177 கோடிக்கு விற்பனையான ஓவியம்’..
- ‘செல்ஃபி மோகத்தால்’.. ‘புதுமணப்பெண் உட்பட 4 பேருக்கு நடந்த பரிதாபம்’..
- ‘சாரி அம்மா.. நான் எந்தப் பொண்ணையும் காதலிக்கல’.. ‘கடிதம் எழுதிவிட்டு மாணவர் எடுத்த விபரீத முடிவு’..
- ‘பிறந்தநாள் கொண்டாடிவிட்டு’... ‘கல்லூரி நண்பர்கள் திரும்பியபோது’... ‘சென்னையில் நடந்த கோர விபத்து’!
- ‘விபத்தென நினைத்த வழக்கில் திடீர் திருப்பம்’.. ‘6 மாத பிளான் என’.. ‘மனைவியும், ஆண் நண்பரும் வாக்குமூலம்’..
- ‘பள்ளி மாணவரை அடித்த ஆசிரியரை’.. ‘வகுப்பறையிலேயே புகுந்து’.. ‘சரமாரியாகத் தாக்கிய குடும்பத்தினர்’..
- 'தனி' அறை, 'சூப்' மட்டுமே உணவு-பறிபோன உயிர்...5 வயது சிறுமியின் 'டைரி'யால் சிக்கிய தாய்!
- 'முதலில் எல்லார் முன்னாடியும் என்ன'.. 'இப்ப என் அம்மாவ'.. டீச்சரின் மேல் உள்ள ஆத்திரத்தில் 4-ஆம் வகுப்பு மாணவன் செய்த செயல்!
- டியூசன் டீச்சரை கத்தியால் குத்தி கொலை செய்த 7 ம் வகுப்பு மாணவன்..! மிரள வைத்த காரணம்..!
- ‘கல்லூரி விடுதியில் இறந்து கிடந்த மருத்துவ மாணவி’.. ‘கழுத்தில் இருந்த மின்கேபிள் அச்சு’.. ‘விசாரணையில் விலகாத மர்மம்’..