ஃபர்ஸ்ட் நானும் 'எட்டு' மணி நேரம் 'தூங்கிட்டு' இருந்தேன்...! 'ஆனா, லாஸ்ட் 12 வருசமாவே...' உறக்கத்தில் 'இப்படி' ஒரு தினுசா...? - வியக்க வைக்கும் இளைஞர்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடந்த தலைமுறையில் 9 மணிக்கு முன்னரே வீடுகளில் இரவு உணவு முடித்து தூங்க சென்று விடுவர். ஆனால் தற்போது படிப்படியாக தூங்க செல்லும் நேரம் அதிகரித்து நள்ளிரவை கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது. 

இளைஞர்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக நேரம் செலவிடுதல், இரவு கண்விழித்து இருந்து திரைப்படங்கள் பார்ப்பது, கேம் விளையாடுதல் என்று இருப்பர். அப்படியே தூங்க சென்றாலும் தூக்கம் வராமல் தவித்து வருகின்றனர். தற்போது இந்த பிரச்சனைக்காக மருத்துவர்களை நாடுபவர்கள் அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜப்பானை சேர்ந்த இளைஞர் ஒருவர் பற்றி வெளிவந்துள்ள செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் தைசுகே ஹோரி (36).  இவர் ஜப்பான் ஷார்ட் ஸ்லீப்பர் அஸோசியேஷன் தலைவராக உள்ளார்.

கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே இவர் தூங்குகிறாராம். இதனால் மிகவும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதாக ஹோரி கூறுகிறார். மேலும், தூங்கும் நேரத்தை எப்படி குறைப்பது என்பது  குறித்து நூற்றுக்கணக்கானோருக்கு பயிற்சி அளித்து வருகிறாராம்.

இதுகுறித்து, தைசுகே ஹோரி கூறும்போது, 'அனைவரையும் போன்று நானும் 8 மணி நேரம் தூங்கிக்கொண்டு இருந்தேன். ஆனால் பல வேலைகள் பாதித்தன. எனவே தூங்கும் நேரத்தை குறைக்கத் தொடங்கினேன்.

படிப்படியாக குறைத்து 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குகிறேன். சில தினங்களில் அரை மணி நேரத்துக்கும் குறைவாகக்கூட தூங்குகிறேன். இதனால் உடல் ரீதியாக எனக்கு எந்த தொந்தரவும் இல்லை' என கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்