"நாலு வருஷமா இதான் பண்ணுறாரு.." வேலையே பாக்காம சம்பளம் வாங்கும் வாலிபர்.. மிரண்டு போன நெட்டிசன்கள்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இன்றைய காலகட்டத்தில், நாம் கடுமையாக உழைத்தால் தான், உழைப்புக்கேற்ற ஊதியத்தை பார்க்க முடியும். அப்படி இருக்கும் போது, சிலர் கடினமாக உழைத்தால் கூட அதற்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்றும் உணர்வார்கள்.

Advertising
>
Advertising

Also Read | "நான் மறுபிறவி எடுக்க போறேன்.." திரைப்படம் பாத்துட்டு இளைஞர் எடுத்த முடிவு.. கடைசியில் நடந்த 'விபரீதம்'!!

அந்த வகையில், எந்த வேலையும் பார்க்காமல், வாலிபர் ஒருவர் கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த வேலையும் பார்க்காமல், பணம் சம்பாதித்து வருகிறார் என கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆனால், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒருவர், எந்த வேலையும் செய்யாமலே நிறைய பணம் சம்பாதித்து வருகிறார். அது எப்படி என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

ஜப்பான் நாட்டை சேர்ந்தவர் ஷோஜி மோரிமோட்டோ (Shoji Morimoto). 36 வயதாகும் இவருக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் தேடி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவை அனைத்தையும் தவிர்த்து வந்த ஷோஜி, மிகவும் வித்தியாசமான வேலை ஒன்றை கையில் எடுத்துள்ளார்.

அதாவது, எந்த வேலையும் செய்யாமல் வெறுமென இருந்து நிறைய பணம் சம்பாதிக்கும் வழி ஒன்றை ஷோஜி கையில் எடுத்துள்ளார். அப்படி ஷோஜி செய்து வரும் வேலையின் சிறப்பம்சம் என்னவென்றால், மற்றவர்களுடன் நேரத்தினை செலவிடுவது மற்றும் உதவியை செய்வது மட்டும் தான். இதற்காக, ஒரு கணிசமான தொகையையும் சம்மந்தப்பட்ட நபரிடம் இருந்தும் ஷோஜி வாங்கி வந்துள்ளார்.

உதாரணத்திற்கு குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு தனியாக செல்ல கூச்சமாக இருப்பவர்களுக்கு துணையாக போவது, பிறந்தநாளை தனியாக செலவழிக்கும் நபருக்கு கம்பெனி கொடுப்பது, மனச் சுமைகளை இறக்கி வைக்க விரும்பும் நபர்களின் மனக் குமுறல்களை செவி கொடுத்து கேட்பது உள்ளிட்ட பல வேலைகளில் தான் ஷோஜி ஈடுபட்டு வருகிறார். அப்படி அவர்களுடன் இருக்கும் போது, அனைத்து செலவுகளையும் தான் சம்மந்தப்பட்ட நபர் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும், சாப்பிடுவது, பானம் அருந்துவது, ஏதாவது ஒரு சில வார்த்தைகள் பேசுவது மட்டும் தான் ஷோஜியின் வேலை.

இப்படி ஒரு சேவையை தான் செய்வதற்காக, சுமார் 69 பவுண்ட் வரை கட்டணமாகவும் ஷோஜி பெற்று வருகிறார். இந்திய மதிப்பில் சுமார் 6,600 ரூபாய் வரை ஆகும். 2018 ஆம் ஆண்டு, இதற்காக ட்விட்டர் கணக்கை தொடங்கிய ஷோஜி, எதுவும் செய்யாத மனிதர் (Do-nothing man) என்ற பட்டத்துடன் அறியப்பட்டு வருகிறார். சுமார், இரண்டரை லட்சம் பேர் வரை, அவரை பின் தொடர்ந்து வரும் நிலையில், ஒரு நாளைக்கு சுமார்  மூன்றில் இருந்து ஐந்து பேருக்கு வரை ஷோஜி சேவை செய்து வருவதாக கூறப்படுகிறது.

அதே வேளையில், சுமார் 3000 அழைப்புகள் வரை அவருக்கு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. தங்களுக்கு பிடித்தமான வேலைகளை பலரும் செய்து பணம் சம்பாதித்து வரும் நிலையில், சும்மா இருந்து கூட பணம் சம்பாதிக்கலாம் என்பதை ஜப்பானின் ஷோஜி என்ற வாலிபர் உணர்த்தி உள்ளதாக பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.

Also Read | நீரில் அடித்து செல்லப்பட்ட 'பெண்'.. நடுவழியில் ஞாபகம் வந்த மகனின் 'முகம்'.. இரவு முழுவதும் நடந்த போராட்டம்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்

JAPAN, MAN, SALARY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்