‘தொட்டால் மரணம்’.. ரெண்டு துண்டாக பிளந்த கல்.. 1000 வருசத்துக்கு முன் இறந்து பெண்ணின் ஆவி மறுபடியும் உயிர்பெற்றதா..? பீதியை கிளப்பிய போட்டோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

1000 ஆண்டுகளுக்கு மேலாக பேய் போன்ற தீயசக்திகளை அடக்கி வைத்திருந்ததாக நம்பப்படும் கில்லிங் ஸ்டோன் இரண்டாக உடைந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
>
Advertising

பேய் இருக்கிறதா இல்லையா, நம்பலாமா நம்பக் கூடாதா என்ற கேள்விக்கு இன்று வரை உறுதியான பதில்கள் கிடைக்கவில்லை. அதனை நம்புவோருக்கு இருக்கு என்றும், நம்பாதவர்களுக்கு இல்லை என்ற அளவிலேயே பதில்கள் உள்ளன. இந்த சூழலில் ஜப்பானில் உள்ள ஷீஷோ சேகி என்ற கில்லிங் ஸ்டோன் பாதியாக பிளந்து அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்நாட்டு புராணங்களின்படி, 1107-1123 வரை ஆட்சி செய்த பேரரசர் டோபாவை கொல்லும் சதியில் தமாமோ நோமே என்ற அழகான பெண் செயல்பட்டுள்ளார். அப்பெண்ணுடைய சடலத்தின் பாகம் ஷீஷோ சேகி என்ற கல்லில் கலந்திருப்பதாக நம்பப்படுகிறது. மேலும் அப்பெண் ஒரு தீய சக்தி என்றும் அந்நாட்டு மக்களால் நம்பப்படுகிறது. 9 வால்களை கொண்ட நரியான அந்த பெண்ணின் ஆவியை இந்த கல்லில் போட்டு கட்டி வைத்ததாக நம்பிக்கைகள் உள்ளன.

டோக்கியோவிற்கு அருகில் உள்ள டோச்சிகி மாகாணத்தில் உள்ள சூடான நீரூற்றுக்குள் இந்த கொலைக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. புத்த துறவி ஒருவர் அந்த கல்லை சிதறடித்து பேயை ஓட்டியதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் இன்று வரை அந்த ஆவி அந்த கல்லில் இருப்பதாக ஜப்பான் மக்கள் நம்பி வருகின்றனர்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு அந்த கொலைல்கல் இரண்டாக பிளந்து துண்டானதாக புகைப்படம் வெளியாகி வைரலானது. ஜப்பானின் நாட்டுப்புற கதைகளின்படி, இந்த பிளவுப்பட்ட கல் தொடர்ந்து விஷவாயுவை வெளியேற்றும் என கூறப்படுகிறது. தமாமோவின் ஆவி 1000 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உயிர்த்தெழுந்துவிட்டதாக ஜப்பான் மக்கள் நம்புகின்றனர். அதனால் அந்நாட்டு அதிர்ச்சியில் உள்ளனர்.

ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே பாறையில் விரிசல் ஏற்பட்டு அதன் வழியாக மழைநீர் சென்றுள்ளது. அதனால் ஏற்பட்ட பாதிப்பே கல் உடைவதற்கு காரணம் என உள்ளூர் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அந்த கல்லை தொட்டாலே மரணம் உறுதி என நம்பப்பட்டு வருகிறது. அதனால் ஜப்பான் அரசு இந்த கொலைக்கல் குறித்து விவாதம் நடத்த திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

JAPAN, KILLINGSTONE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்