ஆபிஸ் நேரத்தை விட ‘2 நிமிஷம்’ முன்னாடியே கிளம்புனதுக்கு இப்படியொரு தண்டனையா.. ‘ஷாக்’ ஆன ஊழியர்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அரசு ஊழியர்கள் 2 நிமிடத்துக்கு முன்னதாக அலுவலகத்தை விட்டு சென்றதற்காக, அவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம் ஜப்பானில் நிகழ்ந்துள்ளது.
ஜப்பான் நாட்டின் சிபா நகரின் உள்ள புனபாஷி நகர கல்வி வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மீது கடந்த மார்ச் 10-ம் தேதி சம்பளக் குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளதாக ‘Japan Today’ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதேபோல் The Sankei News வெளியிட்டுள்ள செய்தியில், ‘ஊழியர்கள் வேலை முடிந்து வெளியேறும் நேரம் மாலை 5.15 ஆக உள்ள நிலையில் அவர்கள் 5.13 மணிக்கே வெளியேறியுள்ளனர்’ என குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து கல்வி வாரியம் விளக்கம் அளித்துள்ளதாக The Sankei News செய்தி வெளியிட்டுள்ளது. அதில்,‘கடந்த 2019 மே மாதம் முதல் ஜனவரி 2021 வரையிலான கால இடைவெளியில் 7 ஊழியர்கள் 316 முறை இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். 2 நிமிடங்கள் முன்னதாக கிளம்புவதற்காக காரணம் என்ன? என ஊழியர்களிடம் கேட்ட போது, 5.17 மணிக்கு வரும் பேருந்தை தவறவிட்டால், அதன் பின்னர் 5.47 மணிக்கு வரும் பேருந்தில்தான் செல்ல முடியும் என்று விளக்கம் அளித்துள்ளனர்.
அலுவலக நேரத்தை விட 2 நிமிடங்கள் முன்னதாக சென்ற இரண்டு ஊழியர்களுக்கு எச்சரிக்கை கடிதமும், 4 நபர்களுக்கு கடுமையாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு உதவும் வகையில் செயல்பட்ட 59 வயது பெண் ஊழியரின் சம்பளத்தில் வரும் காலத்தில் பத்தில் ஒரு பங்கு குறைக்கப்பட்ட உள்ளது’ என புனபாஷி நகர கல்வி வாரியம் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அலுவல நேரத்தை விட 2 நிமிடம் முன்னதாக சென்ற ஊழியருக்கு சம்பளக் குறைப்பு செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பார்க்க நல்லா இருக்குதே...' 'அப்படின்னு நெனச்சு வாங்கியிருக்காங்க...' 'இப்படி ஒரு ஜாக்பாட் அடிக்கும்னு கொஞ்சம் கூட நெனைக்கல...' - நெட்ல செர்ச் பண்ணி பார்த்தப்போ தான் விசயமே தெரிஞ்சிருக்கு...!
- வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை!.. மத்திய அரசு புதிய திட்டம்!.. யாருக்கு சாதகம்?.. யாருக்கு பாதகம்?
- ‘ஊழியர்கள் தான் எங்க சொத்து’!.. ரூ.700 கோடி மதிப்பில் ஸ்பெஷல் ‘போனஸ்’.. பிரபல ‘ஐடி’ நிறுவனம் அதிரடி அறிவிப்பு..!
- புத்தாண்டு பரிசாக ‘சம்பள உயர்வை’ அறிவித்த முதல்வர்.. இன்ப அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்.. எந்த மாநிலம் தெரியுமா..?
- 'திடீரென வந்த மெயிலால் குஷியான ஊழியர்களுக்கு'... 'அடுத்ததாக காத்திருந்த பெரிய டிவிஸ்ட்?!!'... 'ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம்!!!'...
- 'கொரோனா பாதிப்பால் விப்ரோ எடுத்துள்ள முடிவு'... 'வெளியான புது அறிவிப்பால் மகிழ்ச்சியில் ஊழியர்கள்!!!'...
- 'கொரோனா பாதிப்பால்'... 'பிரபல நிறுவனம் எடுத்துள்ள அதிரடி முடிவு?!!'... 'அதிர்ச்சி தரும் அறிவிப்பால் கலக்கத்தில் ஊழியர்கள்!!!'...
- 'கொரோனாவால் அதிரடி திட்டத்தை கையிலெடுக்கும் இன்ஃபோசிஸ்?!!'... 'அசத்தல் அறிவிப்பால் மகிழ்ச்சியில் ஐடி ஊழியர்கள்!!!'...
- 'இந்த நேரத்துலயா இப்படி நடக்கணும்???'... 'திவாலாகும் இரு பெரும் நிறுவனங்கள்?!!'... 'கலங்கி நிற்கும் 25,000 ஊழியர்கள்!!!'...
- 'அடுத்தடுத்த புரோமோஷன்கள்.. சம்பள உயர்வை' அறிவித்து மாஸ் காட்டும் 'தாராள' ஐடி நிறுவனம்.. கொண்டாட்டத்தில் ஊழியர்கள்!!