'மன்னிப்பு கேட்டா சரியா போய்டுமா?... 'எவ்வளவு கனவோடு வெளிநாட்டுக்கு படிக்க போனா'... நொறுங்கிப்போன குடும்பம்!
முகப்பு > செய்திகள் > உலகம்வெளிநாட்டிற்குப் படிக்கச் சென்ற இடத்தில் இளம்பெண் ஒருவருக்கு நடந்த துயரம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இலங்கையின் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர் Wishma Sandamali Ratnayake. இவர் உயர் கல்வி கற்க விரும்பிய நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு மாணவர் விசா மூலம் ஜப்பான் சென்றார். ஜப்பானில் இறங்கிய, அவர் அங்கு தன்னுடைய உயர்கல்வியைத் தொடங்குவதற்கு முன்பு நல்ல ஊதியத்தில் வேலை பார்க்கலாம் என ஆசைப்பட்டுள்ளார்.
ஆனால், ஜப்பானில் மாணவர் விசாவில் உள்ளவர்கள், வாரத்திற்கு 28 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய முடியும். அதோடு அவர்களுக்கு நிரந்தர வேலை கிடைப்பது என்பது மிகவும் கடினம் என்பதை அவர் அங்குச் சென்ற பின்னரே உணர்ந்து கொண்டார். இதையடுத்து இவர் அங்கிருக்கும் கல்வி நிறுவனம் ஒன்றில், ஜப்பானிய மொழியைப் படிக்கத் துவங்கியுள்ளார்.
ஆனால் அதற்கான கல்விக் கட்டணத்தைக் கூட செலுத்த முடியாமல் அவர் அவதிப்பட்ட நிலையில், அங்கிருந்த இளைஞர் ஒருவர் Wishmaவிற்கு பாலியல் ரீதியாகத் துன்புறுத்தலை வழங்கியுள்ளார். இதனால் Wishma காவல்நிலையத்தை நாடியுள்ளார். ஆனால் அங்கும் அவருக்கும் சரியான உதவி கிடைக்காத நிலையில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
ஒரு புறம் நல்ல வேலை கிடைக்காமலும், கல்விக் கட்டணம் செலுத்த முடியாமலும் அவதிப்பட Wishmaவிற்கு, அவருக்கு வழங்கப்பட விசாவிற்கு அதிகப்படியான நாட்களுக்கு மேல் தங்கிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து Wishma அங்கிருக்கும் தடுப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டார்.
இதன் காரணமாக இலங்கைக்குச் செல்ல முடியாமல் தவித்த Wishma, ஒரு குற்றவாளி போல் சிறிய அறையில் அடைக்கப்பட்டு 7 மாதங்கள் கடுமையான துயரங்களுக்கு ஆளாகியுள்ளார். தனக்குக் குடியேற்ற அதிகாரிகள் தேவையான பாதுகாப்பை வழங்குவார்கள் என்று Wishma எதிர்பார்த்த நிலையில், அது எதுவும் நடக்காமல் போனது.
இதற்கிடையே கடந்த டிசம்பரில் Wishmaவின் உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்குச் சென்ற நிலையில், அவரால் நடக்கக் கூட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அவர் சுமார் 20 கிலோ எடையை இழந்த நிலையில் ஒரு சக்கர நாற்காலியால் வைத்து அழைத்துச் செல்லும் அளவிற்கு மிகவும் பலவீனமாக இருந்தார். ஒரு கட்டத்தில் இலங்கைக்குக் கூட திரும்ப முடியாத நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அறிந்த Wishmaவின் குடும்பம் நிலைகுலைந்து போனது. அவர்கள் தங்கள் மகள் எப்படி? ஏன் இறந்தார்? என்பதை ஜப்பானிய அரசாங்கம் விளக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இலங்கை பெண் உயிரிழந்த சம்பவத்தில் மன்னிப்பு கோருவதாக நிதி அமைச்சர் Yoko Kamikawa கூறியுள்ளார். ஆனால் அரசு மன்னிப்பு கோரினால் எங்கள் மகள் திரும்பி வந்து விடுவாரா என சோகத்துடன் கூறியுள்ளார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கடைசி நேரத்துல ஒலிம்பிக் 'கேன்சல்' ஆக சான்ஸ் இருக்கா...? ஒலிம்பிக் போட்டித் தலைவர் அளித்துள்ள பதில்...!
- என்னணே சொல்றீங்க!?.. 'ஒரு செகண்ட்ல... 319 TB' டவுன்லோடிங் ஸ்பீடா!?.. வாயடைத்துப்போன நெட்டிசன்கள்!
- 'எவ்வளவு பேரோட கனவு!.. எல்லாமே போச்சா'!?. விளையாட்டு வீரர்களுக்கு இடியாக வந்த தகவல்!.. ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாகிறதா?
- VIDEO: 'கொஞ்சம் கூட எதிர்பார்க்கல...' கையில 'அத' வச்சிட்டு பக்கா 'பிளானோடு' தான் வந்துருக்காங்க...! 'ஒலிம்பிக் ஜோதியோட கிராஸ் பண்ணினப்போ...' - திடீர்னு இளம்பெண் செய்த காரியம்...!
- 'லவ்' பண்றதுக்காக 'நம்ம ஆளு' நாடு விட்டு நாடு போறாப்புல...! எங்க தெரியுமா...? - என்ன 'கொரோனாவால' கொஞ்சம் 'லேட்' ஆயிடுச்சு...!
- 'இந்த நாடுகளுக்கு எல்லாம் போக வேண்டாம்'... 'லிஸ்டில் இருக்கும் நாடுகள்'... அமெரிக்கா எச்சரிக்கை!
- சும்மா சும்மா 'எங்க ரூட்ல' கிராஸ் பண்றீங்க...! 'இது கொஞ்சம் கூட நல்லதுக்கு இல்ல...' - சீனாவுக்கு ஜப்பான் எச்சரிக்கை...!
- 'கொரோனா 3.0-ஐ உறுதி செய்த நாடு...' 'இது 2.0-ஐ விட வித்தியாசமானது...' - தொற்றுக்கான அறிகுறியில் தெரிய வந்த அதிர்ச்சி தகவல்...!
- 'வெளியானது உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் நாடுகளின் பட்டியல்!'.. இந்தியாவின் இடம் இதுதான்.. முதலிடத்தில் இருக்கும் நாடு எது தெரியுமா?
- 'இனி எல்லாமே ஹைபிரிட் வாகனங்கள் தான்!'.. டார்கெட் குறிச்சாச்சு! பெட்ரோல் வாகனங்களை முழுவதும் அகற்ற முடிவெடுத்த நாடு.. அசர வைக்கும் ப்ளான்!