ஒரே எடத்துல,, '1500' எலும்புக்கூடுகள்... அவங்களோட 'கை', காலுல எல்லாம் ஏதோ... அகழ்வாராய்ச்சியில் வெளியான 'திடுக்'கிடும் 'தகவல்'!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஜப்பான் நாட்டின் மேற்கு நகரமான ஒசாகாவில் அமைந்துள்ள உமேடா என்னும் கல்லறை, வரலாற்று சிறப்புமிக்க கல்லறைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அங்கு நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் போது சுமார் 1500 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ஒசாகா கோட்டை நகரை சுற்றியுள்ள உள்ளூர்வாசிகள் வாழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதில் பெரும்பாலானோர், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், குழந்தைகளாகவும் இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அவர்களின் கைகள் மற்றும் கால் பகுதிகளில் நோய்க்கான அறிகுறிகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த மக்கள் ஏதேனும் தொற்று நோய் காரணமாகவோ, அல்லது இயற்கை பேரழிவின் காரணமாகவோ பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இதனால், அவர்களை கூட்டாக ஒரே இடத்தில் புதைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது. மேலும், பல எச்சங்கள் அடங்கிய ஒரு சவப்பெட்டியை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இது தொற்று நோய் ஏற்பட்ட சமயத்தில், பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றாக புதைக்கப்பட்டதற்கான அறிகுறி என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்