"நீர், பனிமூட்டம், மேகம் எல்லாமே அந்த கோள்-லயும் இருக்கு".. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அளித்த தகவல்.. சந்தோஷத்தில் துள்ளிக்குதித்த நாசா ஆய்வாளர்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா பூமியில் இருந்து வெகுதூரத்தில் உள்ள வாயு கோள் ஒன்றில் நீர் இருப்பதற்கான ஆதரங்களை கண்டுபிடித்திருக்கிறது.
ஜேம்ஸ் வெப்
மனித குலம் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருந்தாலும், பிரபஞ்சம் உருவானது எப்படி? என்ற கேள்விக்கு மட்டும் இன்னும் தெளிவான விடை கிடைத்தபாடில்லை. அதேபோல, விண்வெளியில் பூமியை போலவே, தட்பவெட்பம் கொண்ட கோள்களை கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் வெகுகாலமாக பாடுபட்டு வருகின்றனர். இந்த மர்மத்தை அவிழ்க்க, அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா உருவாக்கியதுதான் இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. இதனை உருவாக்கும் பணிக்காக 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 79 ஆயிரம் கோடி ரூபாய்) வாரி இறைத்தது அமெரிக்கா.
கடந்த டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்ட இந்த தொலைநோக்கி மனித குல வரலாற்றின் முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது. 6.2 டன் எடைகொண்ட இந்த தொலைநோக்கி -230 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலும் இயங்கக்கூடியது.
புது கோள்
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பிய தகவல்களின் அடிப்படையில் WASP-96 b என்னும் கோள் 1,150 ஒளியாண்டுகள் தூரத்தில் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வியாழனை விட பாதிக்கும் குறைவான நிறை மற்றும் 1.2 மடங்கு பெரிய விட்டம் கொண்ட, WASP-96 b நமது சூரியனைச் சுற்றி வரும் எந்தக் கோளையும் விட மிகவும் அதிகமான வெப்பத்தை கொண்டிருக்கிறது. அதாவது இந்த கோளின் வெப்பநிலை 538 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக இருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
WASP-96 b அதன் சூரியனைப் போன்ற நட்சத்திரத்திற்கு மிக அருகில் சுற்றுகிறது. அதாவது மூன்றரை பூமி நாட்களுக்கு ஒருமுறை இந்த நட்சத்திரத்தை WASP-96 b கோள் சுற்றி வருகிறது. மேலும், இந்த கோளில் வளிமண்டலம், பனிமூட்டம், மேகங்கள் இருப்பதாகவும் நாசாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
விண்வெளியில் பூமியை போலவே தட்பவெட்பம் கொண்ட கோள்களை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இந்த WASP-96 b கோளின் கண்டுபிடிப்பு முக்கிய மைல் கல்லாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இது வெறும் டீசர்.. மெயின் பிக்சர் இனிமே தான்.. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த அரிய புகைப்படம்..நாசா வெளியிட்ட அசரவைக்கும் தகவல்..!
- "ஆஹா, இவ்ளோ Galaxy இருக்கா??.." பிரபஞ்சத்தின் அதிசயம்.. உலகையே மிரள வைத்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி
- நிலவுக்கு அனுப்பப்படும் நியூக்ளியர் ரியாக்டர்.. நாசா போட்ட ஸ்கெட்ச் இதுக்குத்தானா?
- நிலவில் உருவான 92 அடி பள்ளம்.. "இப்படி நடக்க சான்ஸே இல்லை" என குழம்பும் ஆராய்ச்சியாளர்கள்.. முழு விபரம்..!
- "எங்க கரப்பான் பூச்சியும் நிலாவுல இருந்து கொண்டுவந்த மண்ணும் எங்களுக்கு வேணும்".. ஏல நிறுவனத்துக்கு நோட்டிஸ் விட்ட நாசா.. என்ன நடந்துச்சு?
- விண்வெளி வரலாற்றுல இப்படி ஒரு ரிஸ்க்-அ யாரும் எடுத்ததில்லை.. செம்ம தில்லுப்பா இவருக்கு.. நாசா பகிர்ந்த வைரல் புகைப்படம்..!
- அது என்ன வைரம் மாதிரி ஜொலிக்குது?...செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வித்தியாசமான பொருள்.. வைரலாகும் புகைப்படம்..!
- செவ்வாய் கிரகத்துல ரகசிய பாதை..?.. முதன்முறையாக மவுனத்தை கலைத்த நாசா ஆராய்ச்சியாளர்கள்..!
- செவ்வாய் கிரகத்துல இருக்கும் ரகசிய பாதை?.. வைரலாகும் புகைப்படங்கள்.. ஆராய்ச்சியாளர்கள் சொல்லிய உண்மை..!
- ‘ஈபிள் டவரை விட பெரிசு’.. பூமியை நோக்கி வேகமாக வரும் சிறுகோள். நாசா எச்சரிக்கை..!