'ஜாலியா பேசிகிட்டு இருந்த காதலர்கள்'... 'திடீரென கதறிய காதலி, பறந்த குடை'... 'பீச்'சில் நடந்த கொடூரம்!
முகப்பு > செய்திகள் > உலகம்கடற்கரையில் அமர்ந்து காதலியுடன் பேசிக்கொண்டிருந்த காதலன், திடீரென காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவரும், இராணுவ முகாமில் பணியாற்றி வரும் ராணுவ வீரர் ஒருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளார்கள். இருவரும் அவ்வப்போது சந்தித்து கொள்வது வழக்கம். அந்த வகையில் நேற்று இருவரும் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள கடற்கரையில் சந்தித்துள்ளார்கள். இருவரும் அமர்ந்து பேசி கொண்டிருக்கும் போது, மருத்துவ மாணவியின் காதலன் திடீரென அவரின் கழுத்தை அறுத்துள்ளார்.
இதனை சற்றும் எதிர்பாராத அந்த மாணவி அலறி துடித்துள்ளார். அப்போது கொடூர வலியினை தாங்க முடியாமல் தனது கையில் இருந்த குடையை தூக்கி எறிந்துள்ளார். அந்த நேரத்தில் மாணவியின் காதலரான ராணுவ வீரர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளார். இந்நிலையில் அங்கு பணியில் இருந்த விமான புலனாய்வு அதிகாரி ஒருவர், ஏதோ அசம்பாவிதம் நடக்கிறது என்பதை உணர்ந்து, தப்பியோடிய ராணுவ வீரரை மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.
இதற்கிடையே மாணவியின் சடலம் கடற்கரையில் மூழ்கியிருந்த நிலையில், அது காவல்துறையினரால் மீட்கப்பட்டது. ராணுவ வீரர் காதலியை எதற்காக கொலை செய்தார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மற்ற செய்திகள்
'போற போக்குல வீசிக்கிட்டு போக முடியாது'... 'வீட்டு குப்பையை எடுக்கணுமா?... சென்னை மாநகராட்சி அதிரடி!
தொடர்புடைய செய்திகள்
- '60 கிமீ வேகத்தில் பாய்ந்த மீன்'... 'போராடிய மருத்துவர்கள்'... சிறுவனின் கழுத்தை துளைத்த கொடூரம்!
- ‘முதலில் தாய், அடுத்து கூட்டாளி’.. கட்டிலில் வைத்து துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்.. மகனின் பகீர் வாக்குமூலம்..!
- ‘பெண்ணை கட்டிக்கொடுக்க மறுத்த அத்தை’.. நடுராத்திரி இளைஞர் செஞ்ச கொடூரம்.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..!
- காதலியை ‘நம்பி’ சென்றவருக்கு... ‘இளைஞரால்’ நேர்ந்த ‘பயங்கரம்’... போலீசாரிடம் கொடுத்த ‘அதிர்ச்சி’ வாக்குமூலம்...
- ‘அதிவேகத்தில்’ சென்ற கார்... உள்ளிருந்து கேட்ட ‘அலறல்’ சத்தம்... ‘சென்னையில்’ மாணவர்கள் செய்த ‘அதிர்ச்சி’ காரியம்...
- ‘அவளால தான் என் தம்பியை இழந்தேன்’... முகத்தை சுற்றி ‘டேப்’... ‘எரிந்த’ நிலையில் கிடந்த 2 ‘சடலங்கள்’... ‘உறையவைக்கும்’ சம்பவம்...
- ‘உள்பக்கமாக பூட்டியிருந்த கதவு, ஜன்னல்’.. 4 குழந்தைகள் உட்பட 8 பேர் பலி.. டூர் சென்ற இடத்தில் நடந்த விபரீதம்..!
- “காணாம போன அந்த ஆயிரக் கணக்கான பேருக்கும் நடந்தது இதான்!”.. உலுக்கிய கோத்தபய ராஜபக்சேவின் அறிக்கை!
- 10 நிமிஷத்துல 4 'குவார்ட்டர்' ... 'மது' குடிக்கும் போட்டியில்... வென்றவருக்கு 'நேர்ந்த' துயரம்!
- ‘விளையாட’ சென்ற ‘சிறுமி’ வீடு திரும்பாததால்... ‘பதறிப்போய்’ தேடிய பெற்றோர்... அடுத்த நாள் ‘காலை’ கிடைத்த ‘அதிரவைக்கும்’ தகவல்...