‘கொரனோ வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க நிதியுதவி’.. சுமார் 100 கோடி கொடுத்த பிரபல தொழிலதிபர்.!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரனோ வைரஸுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க சுமார் 100 கோடி ரூபாயை அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் மா வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் கொரனோ வைரஸ் பாதிப்பால் இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 1000 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனையை சீன அரசு கட்டி வருகிறது.

இந்த நிலையில் கொரனோ வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் மா தனது தொண்டு நிறுவனத்தின் வாயிலாக சுமார் 100 கோடி ரூபாய் சீன அரசுக்கு நிதியுதவி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 41 கோடி ரூபாயை, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள தொகை சிகிச்சைக்கு பயன்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

CORONAVIRUSCHINA, ALIBABA, JACKMA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்