'இப்படி ஒரு ட்விஸ்ட்டை எதிர்பாக்கல'... 'அமெரிக்க அரசியலில் அடிக்க ஆரம்பித்த புயல்'... புதிய சிக்கலில் இவான்கா டிரம்ப் !

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மகள் இவான்காவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்காவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் ஆரம்பித்த நேரத்திலிருந்து ஒருவித பரபரப்பு தொற்றிக் கொண்டது என்றே சொல்லலாம். இந்த சூழ்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மகள் இவான்காவிடம் நிதி முறை கேடு தொடர்பான வழக்கில் விசாரணை நடத்தப்பட்டது புதிய புயலைக் கிளப்பியுள்ளது. அதிபர்  டிரம்பின் பதவியேற்பு விழாவின் போது  திரட்டப்பட்ட நிதி  சுமார் ரூ.790 கோடியிலிருந்து குறிப்பிட்ட தொகை தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த தொகையானது அதிபர்  டிரம்பின் தொழில் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும், அதிலிருந்து டிரம்ப் குடும்பம் ஆதாயம் தேடியதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள டிரம்ப் ஹோட்டலில் அரசு தொடர்பான கூட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், அதிக கட்டணம் வசூலித்ததாகவும், பெரும்பாலான கூட்டம் நிர்ப்பந்தம் காரணம் டிரம்ப் ஓட்டலில் நடைபெற்றதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது. இதில் இவான்கா மீது குற்றசாட்டு எழ முக்கிய காரணம் இந்த கூட்டங்களை ஒருங்கிணைத்தது இவான்கா டிரம்ப். ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் நோக்கம் கொண்டது என விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளை மாளிகை இதுவரை எவ்வித கருத்தும் வெளியிடவில்லை. ஆனால், டிரம்ப் பதவியேற்பு விழா நிர்வாகிகள் குழுவானது இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. விழாவுக்காகத் திரட்டப்பட்ட நிதி முழுவதும் தணிக்கை செய்யப்பட்டது எனவும் அந்தத் தொகையில் எதுவும் சட்டவிரோதமாகச் செலவிடப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது. இருப்பினும், டிரம்ப் பதவியேற்ற ஜனவரி 20, 2017 அன்று மாலை, டிரம்ப் சர்வதேச ஓட்டலில் வைத்து, இவான்கா உள்ளிட்ட டிரம்பின் மூன்று மூத்த பிள்ளைகள் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்காக லாப நோக்கற்ற அமைப்பு ஒன்று சுமார் ரூ.22.14 லட்சம் தொகைக்கும் அதிகமாகச் செலுத்தியுள்ளதாக ஆதாரங்கள் சிக்கியுள்ளது. மேலும், ரூ. 7.38 கோடி அளவுக்கு டிரம்பின் குடும்ப தொழில்களில் முதலீடு செய்யப்பட்ட தொகையைத் திரும்பப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ஏற்கனவே அமெரிக்க முறைகேடாக நடந்துள்ளது என முக்கிய மாகாணங்களில் எந்த ஆதரவும் இன்றி டிரம்ப் தரப்பு தொடர்ந்து வழக்குத் தொடர்ந்தது.

ஆனால் நீதிமன்றங்களால் அந்த வழக்குகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது பொதுமக்களிடம் இருந்து திரட்டப்பட்ட நிதி அதிபரின் மகள் இவான்கா தவறாகப் பயன்படுத்தியுள்ளதாகப் போடப்பட்டுள்ள வழக்கில் அவரிடம் விசாரணை நடைபெற்றுள்ள சம்பவம் அமெரிக்க அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்