'புதைக்க' இடமில்லாமல் குவியும் 'சவப்பெட்டிகள்'... துடைத்து எடுக்கும் 'துயரம்'... 'இத்தாலியில்' இருந்து கற்க வேண்டிய பாடம் இதுதான்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான இத்தாலி தற்போது சவப்பெட்டிகளின் நாடாக மாறியிருக்கிறது.

கொரோனா தோன்றிய சீனா தற்போது மெல்ல இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது. ஆனால் இத்தாலி நாடு கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது. தற்போது வரை அங்கு 10,779 பேர் இறந்துள்ளனர். இறந்தவர்களை அடக்கம் செய்ய முடியாமல் ஏற்கனவே அங்கு ராணுவ வாகனங்களை பயன்படுத்தி சவப்பெட்டிகளை எடுத்து செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 756 பேர் இறந்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக அங்கு 919 பேர் இறந்தனர். தொடர்ந்து சனிக்கிழமை 889 பேர் இறந்தனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அங்கு அதிகபட்சமாக 756 பேர் இறந்துள்ளனர். இதனால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை அங்கு 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இத்தாலியில் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட காரணம் கொரோனா தொற்று ஏற்பட்ட ஆரம்ப காலத்தில் அரசின் உத்தரவுகளை யாரும் கடைபிடிக்காமல் போனதே ஆகும். மக்கள் அரசின் உத்தரவுகளை கடைபிடிக்காமல் தொடர்ந்து வெளியில் நடமாடிக் கொண்டே இருந்தனர். இதனால் அங்கு யாருக்கு இருக்கிறது என்பதே தெரியாமல், மக்கள் பலருக்கும் வேகமாக பரவ ஆரம்பித்து விட்டது.

இறந்தோருக்கான சடங்குகளைச் செய்யக்கூட மக்கள் யாரும் அங்கு வருவதில்லை. வரக்கூடிய நிலைமையில் அவர்களும் இல்லை. இறுதி அடக்கத்துக்காக தேவாலயங்கள், கூடாரங்கள் எனப் பல இடங்களில் சவப்பெட்டிகள் முகவரிகள் எழுதப்பட்டு காத்திருக்கின்றன.

உலகில் எந்தவொரு நாட்டுக்கும் இப்படியொரு நிலை வரக்கூடாது என்று நினைக்கும் அளவுக்கு இத்தாலியின் நிலை இருக்கிறது. சீனா நாட்டு மருத்துவர்கள், கியூபா நாட்டு மருத்துவர்கள் களமிறங்கியும் அந்நாட்டின் இறப்பு எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. சவப்பெட்டிகளை அடக்கம் செய்யக்கூட முடியாத துயரமான சூழ்நிலையில் இருந்து இத்தாலி எப்போது விடுபடப்போகிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.

தற்போதைய நிலையில் அங்கு சவப்பெட்டிகள் கிடைப்பதிலும் சிக்கல், கிடைத்த பெட்டிகளில் உடல்களை வைத்து அடக்கம் செய்வதிலும் சிக்கல் நிலவுகிறது. இதனால் பெட்டிகளைத் தூக்கிச் செல்லக்கூட முடியாமல் வண்டிகளில் வைத்துத் தள்ளிச் செல்கின்றனர். மக்கள் அரசின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு தொடர்ந்து வெளியில் நடமாடியதன் விளைவாக இன்று ஒட்டுமொத்த இத்தாலியும் துயரத்தில் சிக்கி தவித்து வருகிறது.

இதனால் தான் இந்திய அரசு தற்போது ஊரடங்கு உத்தரவினை கடுமையாக அமல்படுத்தி வருகிறது. எனவே இத்தாலி மக்கள் செய்த அதே தவறை நாமும் செய்யாமல், அரசின் உத்தரவுகளை மதித்து நடந்து கொரோனாவை வெல்வோம்!

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்