Fact Check:‘இத்தாலியில் இளையராஜா?’.. ‘இஞ்சி இடுப்பழகி’ பாடலை பாடி மன அழுத்தத்தை குறைத்துக்கொள்ளும் இத்தாலி மக்கள்?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக அளவில், சீனாவிற்கு அடுத்தபடியாக பெரும் உயிர் இழப்புகளையும், அதிக அளவிலான பாதிப்புகளையும் சந்தித்துள்ள நாடாக இத்தாலி மாறியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் இதுவரை 2,136 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ச்சியாக வைரஸ் தொற்றினை தடுக்கும் முயற்சியில் அந்நாட்டின் முக்கிய நகரங்கள் முடங்கியதோடு, மக்களும் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

இந்நிலையில் இத்தாலி தேசிய கீதம், இத்தாலி மொழி பாடல்களை பாடி அந்நாட்டு மக்கள் பாடி, தங்கள் மன அழுத்தங்களை போக்கிக் கொண்டு வருகின்றனர். இதனிடையே தேவர் மகன் படத்தில் இளையராஜா இசையில் உருவாகி இடம் பெற்ற, இஞ்சி இடுப்பழகி பாடலை

இத்தாலியில் வாழும் மக்கள் பாடி வருவதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஆனால் இந்த வீடியோ உண்மை இல்லை என்றும், பிரபல மொட்டை மாடிக்குழுவிசைக் கலைஞர்கள் பாடிய வீடியோதான் உண்மையான வீடியோ என்றும், இத்தாலியில் இளையராஜா பாடலை பாடுவதாக வந்த செய்திகள் உண்மை அல்ல என்றும்

இணையவாசிகள் தெரிவித்ததோடு, அந்த வீடியோ க்ளிப்பையும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

ITALYCORONAVIRUS, CORONAVIRUSOUTBREAK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்