'வீட்டிலேயே கஞ்சா பயிரிடலாம்'... 'இப்படி ஒரு எதிர்பாராத அறிவிப்பை வெளியிட்ட நாடு'... பின்னணி காரணம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உங்கள் சொந்த தேவைக்காக வீட்டிலேயே கஞ்சாவை வளர்ப்பது சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் சிறிய அளவிலான கஞ்சா சாகுபடியைச் சட்டப் பூர்வமாக்கி அந்நாடு உத்தரவிட்டுள்ளது. தற்போது அதற்கான ஒரு சீர்திருத்தம்  இத்தாலிய நாடாளுமன்றத்தின் கீழ் சபையின் நீதிக்குழுவால் நிறைவேற்றப்பட்டது. இந்த சீர்திருத்தத்தின் கீழ் வீட்டில் நான்கு கஞ்சா செடிகள் வரை வளர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் கஞ்சா கடத்தல் மற்றும் கையாளுதல் ஆகியவற்றுடன் தொடர்புடைய குற்றங்களுக்கான அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது, அதற்கு அதிகபட்ச தண்டனையாக 6 முதல் 10 ஆண்டுகள் வரை அதிகரிக்கப்படுகிறது. இத்தாலியப் பாராளுமன்ற உறுப்பினர் ரிக்கார்டோ மேகியால் (Riccardo Magi) முன்வைக்கப்பட்ட இந்த சீர்திருத்தம் காரணமாக, தனிப்பட்ட பயன்பாட்டிற்காக உள்நாட்டுக் கஞ்சா சாகுபடியை சட்டப்பூர்வமாக்கிய ஐரோப்பாவின் முதல் நாடுகளில் ஒன்றாக இத்தாலி மாறியுள்ளது.

2019-இல் இத்தாலியின் உச்ச நீதிமன்றத்தில் சிறிய அளவிலான கஞ்சாவை வளர்ப்பது சட்டப்பூர்வமானது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சீர்திருத்தம் அமுலுக்கு வருகிறது. ஏற்கெனவே ஸ்பெயின் மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகள் வீட்டில் 5 கஞ்சா செடிகள் வரை வளர்க்க அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்