'ஆயுதமின்றி' போரிடுவதற்கு சமம்... 100 மருத்துவர்களின் 'இறப்பால்' கலங்கிப்போன சுகாதாரத்துறை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மக்களுடன் சேர்ந்து மருத்துவர்களும் உயிரிழக்கும் துயரம் இத்தாலி மக்களை மேலும் வேதனையில் ஆழ்த்தி இருக்கிறது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி வருகிறது. உச்சபட்சமாக இத்தாலியில் இதுவரை கொரோனாவுக்கு 17,669 பேர் உயிரிழந்து உள்ளனர். கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் ஓய்வு பெற்ற மருத்துவர்களையும் பணிக்கு திரும்புமாறு அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்தது. இதனை ஏற்று ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் சேவைசெய்ய முன் வந்தனர்.

இந்த நிலையில் தற்போது வரை 100 மருத்துவர்கள் உயிரிழந்து இருப்பதாக இத்தாலி நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது. இதேபோல மருத்துவ ஊழியர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 30 பேரும் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். இது அந்நாட்டு மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை,'' கொரோனா வைரஸுக்கு எதிராக போராடும் மருத்துவர்களுக்கு உரிய உபகரணங்களை வழங்க வேண்டும். போதிய உபகரணங்கள் இன்றி மருத்துவர்களை போராட செய்வது ஆயுதமின்றி போரிடுவதற்கு சமம்,'' என தெரிவித்து இருக்கிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்