'எகிப்து மம்மி'க்குள்ள அப்படி என்ன தான் இருக்கு?... CT ஸ்கேன் எடுத்து பார்த்த மருத்துவர்கள்!.. வெளிச்சத்துக்கு வரும் மனித உடலின் ரகசியங்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இத்தாலிய மருத்துவமனை ஒன்று, எகிப்து மம்மியின் ரகசியங்களைக் கண்டுபிடிக்க CT ஸ்கேனைப் பயன்படுத்தியுள்ளது.

CT ஸ்கேன் (Computed Tomography) என்பது மனித உடலின் குறுக்குவாட்டில் உள்ள பகுதிகளில் ஊடுகதிர்களைச் செலுத்தக் கணினியைப் பயன்படுத்தும் முறை ஆகும். கணினி, உடலின் நகர்வுகளைக் கட்டுப்படுத்தி, தகவலைப் பகுப்பாய்வு செய்து, படத்தையும் விவரங்களையும் வெளியிடும்.

இந்நிலையில், பண்டைய எகிப்தியப் பாதிரியாரான அங்கேகோன்சுவின் (Ankhekhonsu) பதப்படுத்தப்பட்ட உடல், பெர்கமோவின் (Bergamo) தொல்பொருள் அருங்காட்சியகத்திலிருந்து மிலானின் (Milan) மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.

அதில், வல்லுநர்கள் கிட்டத்தட்ட 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கைமுறையையும், அடக்கம் செய்யும் வழக்கங்களையும் ஆராய்வார்கள்.

இதன் மூலம், அந்த எகிப்தியப் பாதிரியாரின் வாழ்க்கையையும், மரணத்தையும் மறுநிர்மாணம் செய்து, அவரது உடலைப் பதப்படுத்த எந்த வகையான பொருட்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை அறியலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

நவீன மருத்துவ ஆராய்ச்சிக்கு பண்டைய நோய்களையும் காயங்களையும் ஆராய்வது முக்கியம் என்று கூறப்படுகிறது. மேலும், இதன் வாயிலாக பண்டைய எகிப்து மம்மி ஒன்று, நவீன மருத்துவ தொழில்நுட்பத்தைச் சந்தித்துள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்