'இதான் லேட்டஸ்ட் ஃபேஷன்...' 'அழுக்கான ஜீன்ஸ்-க்கு செம டிமாண்ட்...' 'ஆனா விலைய கேட்டா மயக்கம் வந்திடும்...' - அழுக்கு ஆக ஆக ரேட் இன்னும் ஜாஸ்தி... !

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இனி ஆடைகளை அணிந்து அழுக்கு செய்யாமல், அழுக்கான கறைப் படிந்த தற்போது டிரென்ட் ஆகி வாடிக்கையாளர்கள் வாங்க விரும்புகின்றனர்.

வித்தியாசமான ஆடைகளை அணிவதில் ஆண்களும் பெண்களும் போட்டி போட்டுக்கொள்ளும் இன்றைய சூழலில் தற்போது செயற்கை முறையில் கறை படிந்த ஆடைகள் விற்பனையில் கல்லாக்கட்டி வருகின்றன.

இந்திய மனநிலையில் பெற்றோர்கள் பிள்ளைகள் அணியும் உடை அழகாகவும், அழுக்கு படியாமலும் இருக்க வேண்டும் என நினைப்பதுண்டு. ஆனால் தற்போது அதற்கு எதிராக கறைபடிந்த ஆடைகளை வெளியிட்டுள்ளது இத்தாலியை சேர்ந்த ஃபேஷன் நிறுவனம்.

அந்நிறுவனம் வெளியிட்ட வித்தியாசமான செயற்கை கறைபடிந்த ஜீன்ஸ் விலை தான் தலை சுற்றும் வகையில் உள்ளது எனலாம்.

ஜீன்ஸ் சுமார் ரூ.88,000க்கு விற்பனை செய்யப்படுகிறது, அதுமட்டுமில்லாமல் விற்கப்படும் ஜீன்ஸில் கூடுதலாக ஏதாவது வசதி வேண்டுமென்றால் அதற்குண்டான கட்டணமும் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் அதிக கறைகள் வேண்டுமென்றால் அதற்கு ரூ.1 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இனி புதுத்துணி கறைபடியும் என பயமில்லாமல், கறைபடிந்த துணியை வாங்கி அணிவதற்கு பலரும் தயாராக இருக்கின்றனர் எனக்கூறலாம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்