2 வருஷமா மேஜையில் உட்கார்ந்தபடியே.. இப்படி ஒரு காட்சியை யாரும் கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாது.. மனசாட்சியை உலுக்கும் சம்பவம்
முகப்பு > செய்திகள் > உலகம்இத்தாலி: இத்தாலியில் 70 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவரது சடலம் மேசையில் அமர்ந்தபடியே இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியில் வடக்கு பகுதியில் கோமோ மாநிலத்தில் உள்ள பிரெஸ்டினோ எனும் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் இந்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. அந்த வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த மரினெல்லா எனும் 70 வயது பெண்ணுக்கு உறவினர் என்று யாரும் இல்லை என கூறப்படுகிறது.
கதவை திறக்காத காரணத்தினால் சந்தேகம்:
இத்தாலியின் லொம்பார்டி பகுதியில், பலத்த காற்று வீசியது. அப்போது, மரினெல்லாவின் வீட்டு தோட்டத்தில் உள்ள சில மரங்கள் வேருடன் சாய்ந்து விழும் நிலையில் காணப்பட்டது. இதனைக் கண்ட காவல் துறையினர், அந்த வீட்டில் உள்ளவர்களை தொடர்புகொள்ள கதவைத் தட்டியுள்ளார். யாரும் திறக்காத காரணத்தினால் ஏதோ தப்பாக உள்ளது என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, கண்ட காட்சி அவர்களை உறைய செய்துள்ளது. அங்கே, மரினெல்லா ஒரு மேசையில் அமர்ந்தபடி உயிரிழந்து அப்படியே இருந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, அவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக வெளியே எங்கும் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம்:
சம்பவ இடத்தில் சந்தேகப்படும் விதமாக போலீசார் எதையும் கண்டுபிடிக்கவில்லை. அவருக்கு ஏதும் தவறாக நடந்திருக்கவோ அல்லது அவர் கொலை செய்யப்பட்டிருக்கவோ வாய்ப்பில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் இறந்து கண்டிப்பாக 2 ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என்றும் உறுதிசெய்யப்பட்டது. பார்த்துக்கொள்ள மட்டுமல்ல உயிரிழந்தபிறகு இறுதிச்சடங்கு செய்து அவரை அடக்கம் செய்ய யாருமின்றி அனாதையாக அவரது உடல் கிடந்துள்ளது. இந்த சம்பவம் இத்தாலியில் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இது நமக்கு ஒரு பாடம்:
மரினெல்லாவுக்கு நடந்துள்ளது ஒரு மிக கொடுமையான மரணம், இது நமது மனசாட்சியை காயப்படுத்தியள்ளது என இத்தாலியின் குடும்ப அமைச்சர் எலினா பொனெட்டி முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் மனிதர்கள் இடையே ஒற்றுமையாக சார்ந்து வாழ வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை மரிநெல்லாவின் நிகழ்வில் இருந்து ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
இத்தாலியில் 75 வயதுக்கு மேற்பட்டவர்களில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் தனியாக வாழ்கின்றனர் என்று தேசிய புள்ளியியல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இந்த ஒற்றை புகைப்படம் எவ்ளோ பெரிய மாற்றத்தை உண்டு பண்ணிடுச்சு! அந்த போட்டோகிராபர் நல்லா இருக்கணும்
- 'பறவைக் கூட்டத்தில் மோதிய விமானம்...' திடீர்னு எஞ்சின்ல இருந்து...' - பதறிப்போன 'விமானி' செய்த காரியம்...!
- 'இத கேக்க தான் இத்தனை நாள் காத்திருந்தோம்'... 'இனிமேல் மாஸ்க் வேண்டாம்'... அதிரடியாக அறிவித்த நாடு!
- ‘ரொம்ப நாளா ஐபோன் வாங்கணும்னு ஆசை’!.. ஆன்லைனில் ஆர்டர் செய்த இளைஞர்.. கடைசியில் காத்திருந்த மாபெரும் ட்விஸ்ட்..!
- தங்க காரில் 1000 மைல் கடந்து.. காதலியை காண வந்த மல்டி மில்லியனர்!.. காரைப் பார்த்ததுமே போலீஸில் பிடித்துக் கொடுத்த காதலி!
- 'ரொம்ப கோவக்காரர் போல...' 'மனைவி கூட பயங்கர சண்டை...' 'கோவத்தை தணிக்க கணவர் செய்த காரியம்...' - கடைசியில போலீசார் வைத்த ஆப்பு...!
- 'என்னது iPhone-ல இந்த feature இல்லயா'?.. விளம்பர விவகாரத்தில்... வசமாக சிக்கிய Apple நிறுவனம்!.. வெளியான அதிர்ச்சி தகவல்!
- 'விலைய கேட்டாலே எல்லாரும் தெறிச்சு ஓடுறாங்க'... இந்த 'ஹேண்ட்பேக்'ல அப்படி என்ன ஸ்பெஷல்?.. 'ஜஸ்ட் ரூ.53 கோடி ஒன்லி'!!
- 'வெறும் 87 ரூபாய்க்கு ஏலத்திற்கு வரும் வீடுகள்!!!'... 'அதுவும் எந்த நாட்டுலனு தெரியுமா?'... 'அசத்தல் அறிவிப்புக்குப்பின் இப்படியொரு காரணமா?!!'...
- 'பேக்ரவுண்ட்ல வயலின் இசை...' 'பால்கனியில நின்னு பார்த்த அடுத்த செகண்டே லவ் பத்திக்கிச்சு...' - லவ் ப்ரபோஸ் பண்ணினது தான் வாவ் சர்ப்ரைஸ்...!