‘குழந்தைகளோடு குடியேறினால் வீடு இலவசம்’.. ஆச்சரியப்பட வைத்த அரசு..! எங்க தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > உலகம்புதிதாக குடியேறும் தம்பதிக்கு இலவசமாக வீடு வழங்கப்படும் என இத்தாலி நாட்டில் உள்ள ஒரு நகரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி நாட்டில் உள்ள சிசிலி தீவில் அமைந்துள்ளது கம்மராட்டா நகர். இங்கு இருக்கும் வீடுகள் அனைத்தும் பழங்கால கட்டிடக்கலைக்கு சான்றாக பழைமையின் அழகோடு அமைந்துள்ளன. ஆனால் பிரச்சனையே இந்த பழைமையான வீடுகள்தான். இங்குள்ள வீடுகள் பலவும் பரமாரிப்பு இல்லாமல் இருக்கின்றன. அதற்கான பணவசதியும் இருப்பதில்லை என கூறப்படுகிறது. இதனால் பலரும் வீட்டை காலி செய்துவிட்டு சென்றுள்ளனர்.
இது தொடர்ந்தால் நகரமே வெறிச்சோடிப் போய்விடும் என கவலைப்பட்ட கம்மராட்ட நகர மேயர் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் இந்த நகரத்தில் குழந்தைகளுடன் வந்து தங்கும் தம்பதிகளுக்கு இலவசமாக வீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக திருமணமான தம்பதிகள் இங்கு குடியேறி குழந்தை பெற்றுக்கொண்டால், இலவச வீடும், 1000 யூரோ போனஸாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கு குடியேருபவர்கள் மூன்று ஆண்டுக்குள் வீட்டை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். குடியேருவதற்குமுன் 5000 யூரோ டெபாசிட்டாக கொடுக்க வேண்டும். வீட்டை மறுசீரமைப்பு செய்தவுடன் டெபாசிட் பணம் திருப்பி தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புக்கொண்டால் வீடுகளை இலவசமாக கொடுக்கும்படி வீட்டு உரிமையாளர்களுக்கு கம்மராட்ட மேயர் உத்தரவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்