‘குவிந்து கிடக்கும் சவப்பெட்டிகள்’... ‘24 மணி நேரமும் இயங்கும் இடுகாடுகள்’... அழைக்கப்பட்ட ராணுவம்.... 'இத்தாலியில் நடக்கும் துயரம்'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இத்தாலியில் கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து எங்கும் மரண ஓலமாக கேட்கத் தொடங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவுக்கு வெளியே இந்த நோய்த்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி விளங்குகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் நேற்று ஒரே நாளில் இத்தாலியில் 475 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோய்த்தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து, இத்தாலியில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு இதுதான்.

இதன் மூலம் இத்தாலியில் மட்டும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாயிரத்தை நெருங்கியுள்ளது. அந்நாட்டிலேயே மிக அதிகமாக பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்ட பெர்காமோ நகரத்தில் இடுகாடு திணறும் அளவுக்கு தினசரி மரணங்கள் நடப்பதாக செய்திகள் கூறுகின்றன.

சராசரியாக ஒருநாளைக்கு குறைந்தது 93 பேர் அந்த நகரத்தில் உயிரிழப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. “கொரோனா தன்னை பாதித்துள்ளது என்று தெரியாமலேயே பலர் சோதனை செய்வதற்கு முன்பே உயிரிழந்துள்ளனர். கணக்கில் எடுத்துக்கொண்டால் மொத்த உயிரிழப்பு உண்மையான எண்ணைவிட அதிகம் இருக்கும்” என்று பெர்காமோ நகர மேயர் கோரி கூறுகிறார்.

அந்நகரில்,உள்ள இடுகாடு 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. எனினும், ஒரு நாளைக்கு 25 சடலங்களை மட்டுமே எரிக்க முடியும் என்பதால், நூற்றுக்கணக்கான சவப்பெட்டிகள் மருத்துவமனையில் தேங்கியுள்ளன.

இதனால், பக்கத்து நகரங்களில் உள்ள இடுகாட்டில் எரிக்க, அந்த சவப்பெட்டிகள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த பணிக்காக ராணுவம் வரவழைக்கப்பட்டு அவர்களின் உதவியுடன் கொண்டு சென்று, இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்படுகின்றன. மரண விகிதத்தில் இத்தாலி சீனாவை மிஞ்சும் என அச்சம் அங்கு நிலவி வருகிறது.

KILLED, ITALY, CORPSES, COPE, CREMATORIUM, DEATHS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்