"இது அவரே இல்ல.. இந்த 2 புகைப்படங்களையும் பாருங்க!".. 'வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் போலவே இன்னொருவரா?'.. பெண் எம்.பியின் பரபரப்பு ட்வீட்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சமீபத்தில் வெளியான வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் புகைப்படத்தில் இருப்பது  “அவர் அல்ல.. அவரைப் போன்ற உருவத்தில் இருக்கும் அவரது போலி போலிருக்கிறது!” என்கிற சந்தேகத்தை முன்னாள் எம்.பி எழுப்பியுள்ளார்.

உலகின் மிகப் பிரபலமான தலைவர்களில் ஒருவரான வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை சமீபத்தில் மோசமானதாகவும், அவர் இறந்துவிட்டதாகவும் கூட வதந்திகள் வந்தன. இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடந்த வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அதிபர் கிம் ஜாங் உன் தோன்றினார்.

இந்த நிலையில் தற்போது புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது கிளம்பி உள்ளது. அதன்படி, அந்த புகைப்படங்களில் இருப்பது அவரில்லை என்றும் அவரது போலி உருவத் தோற்றத்தில் இருக்கும் வேறொருவர் என்றும் பிரிட்டன் நாடாளுமன்றத்தின் முன்னாள் பெண் உறுப்பினர் லூயிஸ் மென்ச் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கிம் ஜாங் உன் போன்ற இருவேறு புகைப்படங்களை பதிவிட்டு,

“இதில் உள்ள கண் மற்றும் காதுகளைப் பாருங்கள்” என்றும்  “நிகழ்ச்சியில் பங்கேற்றது அவர் இல்லை” என்றும் தெரிவித்திருந்தார். இதனைக் கண்ட இணையவாசிகள் கிம்மின் பழைய புகைப்படங்களை ஆராயத் தொடங்கியுள்ளனர்.

உலகில் இவ்வாறான சர்ச்சைகள் எழுவது இது முதல் முறை அல்ல. புரட்சியாளர் ஜோசப் ஸ்டாலின், வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடங்கி சதாம் உசேன், ஹிட்லர் வரையில் பலருக்கும் பாதுகாப்பு கருதி இப்படியான போலி உருவத் தோற்றத்தவர்கள் உலா வந்ததாக சர்ச்சைகள் உள்ளன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்