Russia – Ukraine Crisis: 'தனி மனிதனின் அதிகார பணவெறி'.. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பரபரப்பு பதிவு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கடுமையாக விமர்சித்து உள்ளார்.

Advertising
>
Advertising

ஏற்கனவே மேட்ச் தோத்த சோகம்.. இப்போ இதுவேறையா.. கேன் வில்லியம்சனுக்கு ‘ஷாக்’ கொடுத்த ஐபிஎல் நிர்வாகம்..!

போர்

ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் தேசம் விருப்பம் தெரிவித்து வந்த நிலையில் இந்த முடிவை ரஷ்யா கடுமையாக எதிர்த்தது. இதன் தொடர்ச்சியாக உக்ரைன் நாட்டில் சிறப்பு ராணுவ ஆப்பரேஷனை நடத்த அனுமதி கோரி ரஷ்ய பாராளுமன்றத்தில் அதிபர் புதின் கோரிக்கையை முன்வைத்தார். இதற்கு பாராளுமன்றமும் அனுமதி கொடுத்தது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுப்பதாக அறிவித்தார் விளாடிமிர் புதின்.

இதனை அடுத்து உக்ரைனில் ரஷ்ய ராணுவத்திற்கும் உக்ரைன் பாதுகாப்பு படைக்கும் இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. இதன்காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது. மேலும் இந்த போர் காரணமாக இதுவரையில் 30 லட்சம் மக்கள் அண்டை தேசங்களில் தஞ்சமடைந்துள்ளதாக உக்ரைன் கூறிவருகிறது.

விஜய் ஆண்டனி

தமிழக முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான விஜய் ஆண்டனி இசைத்துறை மட்டும் அல்லாது நடிப்பிலும் கால் பதித்திருக்கிறார். இவருடைய இசையில் முதலில் வெளிவந்த தமிழ்ப்படம் சுக்கிரன் ஆகும். அதனை தொடர்ந்து ஏராளமான படங்களுக்கு இசையமைத்துவந்த விஜய் ஆண்டனி சலீம், பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.

கோபம்

இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் விஜய் ஆண்டனி," ஒரு தனி மனிதனின் அதிகார பணவெறி உக்ரைன் மக்களை கொத்து கொத்தாக கொன்று குவிக்கிறது. இது ரஷ்யாவின் தாக்குதல் அல்ல. புதினின் தாக்குதல்" என குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதாக அந்நாட்டு அதிபர் அறிவித்ததை தொடர்ந்து உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாட்டு தலைவர்கள் புதினை கடுமையாக விமர்சித்துவந்தனர். அதுமட்டும் அல்லாமல் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. மேலும், தங்களது நாட்டில் உள்ள ரஷ்ய தொழிலதிபர்களின் சொத்துகளையும் முடக்கியுள்ளன. இருப்பினும் உக்ரைன் தாக்குதலை ரஷ்யா தொடர்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.

மேட்ச் தோத்ததும் KL ராகுல் போட்ட ட்வீட்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்.. அப்படி என்ன இருக்கு அதுல..?

RUSSIA, UKRAINE, PUTIN, MUSIC DIRECTOR VIJAY ANTONY, RUSSIA WAR, RUSSIA UKRAINE CRISIS, VLADIMIR PUTIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்