மிஷன் சக்தி திட்டம்; நாசாவின் குற்றச்சாட்டிற்கு இஸ்ரோ பதிலடி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

 

மிஷன் சக்தி திட்டம் குறித்த நாசாவின் குற்றச்சாட்டிற்கு இஸ்ரோ தற்போது பதிலளித்துள்ளது. இது குறித்து பேசிய தீபன் மிஸ்ரா :"நண்பர்கள் நம் திருமண வீட்டிற்கு வந்து விட்டு, திருமணத்தில் அது இல்லை, இது இல்லை என குறை சொல்லுவது போல் உள்ளது நாசாவின் குற்றச்சாட்டு. அவர்களுக்கு எல்லாம் தெரிந்திருந்தும் இந்த குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.

மேலும், கடந்த 2007ம் ஆண்டு பூமியில் இருந்து சுமார் 800 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு செயற்கைகோளை சீனா தாக்கி சோதனை நடத்தியது. அந்த செயற்கைகோளின் உடைந்த பாகங்கள் இன்னும் அங்கு மிதந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில், அதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் நாங்கள் இந்த மிஷன் சக்தியை நாங்கள் நடத்தவில்லை. 300 கி.மீ. இலக்கில் இருந்த செயற்கைகோளை தாக்குதலுக்கு தேர்ந்தெடுத்தற்கு காரணம் இது தான். 300 கி.மீ தூரம் என்பது குறைவான காற்றழுத்தம் உள்ள பகுதியாகும். அதனால் உடைந்த பாகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பூமியை நோக்கி வரும். பின்பு வெப்பம் காரணமாக தீ பற்றி பஸ்பமாகி விடும்.

இந்நிலையில், தற்போது உடைந்த பாகங்கள் எல்லாம் இன்றும் 6 மாதத்தில் எங்கு போனது என்றே யாருக்கும் தெரியாமல் போய் விடும். ஆனால் சீனா தாக்குதல் நடத்தியது 800 கி.மீ தொலைவில் இருந்த செயற்கை கோளைதான். அங்கு காற்றழுத்தம் சுத்தமாக இருக்காது. அதனால் பாகங்கள் நகராமல் அங்கேயே இன்றும் மதந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்த தாக்குதலில் எந்த ஒரு வெடிப்பும் நடக்கவில்லை. நேராக ஏவுகனை சென்று செயற்கைகோளின் மீது மோதியது. இது கிட்டத்தட்ட ஒரு புல்லட் சென்று தாக்கியது போல தான். மேலும் விண்வெளியில் உள்ள அனைத்து செயற்கைகோள்களும் பூமியில் இருந்து கண்காணிக்கப்படுகின்றனர். அதன் பாதையில் இந்த விண்வெளி குப்பைகள் வந்தால் செயற்கைகோளின் திசையை மாற்றிவிடும் வேலையை அனைத்து நாடுகளும் செய்கிறது என்பது நாசாவிற்கு தெரியாதது இல்லை.

மேலும், இது போன்ற குற்றச்சாட்டுகள் வேண்டுமென்றே சொல்லப்படுகின்ற ஒன்றுதான். இந்தியா ஒரு போதும் விண்வெளியில் விபத்தை ஏற்படுத்து நோக்குடன் செயல்படவில்லை. இந்தியாவின் விண்வெளி விஞ்ஞானிகள் திறன் குறித்து நாசா நன்கு அறிந்திருந்தும் இது போன்று சிறு பிள்ளை தனமான குற்றச்சாட்டுகளை சொல்லுவது வேடிக்கையாக உள்ளது" என விளக்கம் அளித்துள்ளார்.

NASA, ISRO

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்