நாங்க 'ரகசிய' தகவல்களை 'அவங்களுக்கு' விற்க மாட்டோம்...! 'பெகாசஸ்' ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து வெளிவந்துள்ள 'அதிர்ச்சி' தகவல்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு மென்பொருளை நாங்கள் தனியாருக்கு விற்கவில்லை என இஸ்ரேலுக்கான இந்தியாவுக்கான தூதர் கூறியுள்ளார்.

நாங்க 'ரகசிய' தகவல்களை 'அவங்களுக்கு' விற்க மாட்டோம்...! 'பெகாசஸ்' ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து வெளிவந்துள்ள 'அதிர்ச்சி' தகவல்...!
Advertising
>
Advertising

சில மாதங்களாகவே இஸ்ரேல் நாட்டில் தயாரிக்கப்பட்ட பெகாசஸ் ஒட்டுக்கேட்பு மென்பொருள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருக்கும் பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் உளவு பார்த்து அவர்களின் செல்போன் ஒட்டு கேட்கப்படுவதாக செய்திகள் வெளியாகின.

Israel's ambassador says Pegasus will only be sold to govts

இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டத்தில் உச்சநீதிமன்றம் 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கான இஸ்ரேல் நாட்டின் தூதர் நார் கிலோன், பெகாசஸ் மென்பொருள் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.

அதில், 'இஸ்ரேலைச் சேர்ந்த தனியார் நிறுவனமான பெகாசஸ் என்ற மென்பொருளை தயாரிக்கும் என்எஸ்ஒ என்ற நிறுவனம் ஒவ்வொரு ஏற்றுமதிக்கும் அரசின் அனுமதியை பெற்றுள்ளது.

இஸ்ரேல் நாட்டின் அனுமதி இன்றி என்எஸ்ஓ நிறுவனம்  தனியாருக்கு விற்பனை செய்ய முடியாது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் மற்றும் உளவு பார்ப்பது குறித்து எந்த கருத்தும் கூற முடியாது' எனக் கூறியுள்ளார்.

அதோடு, இஸ்ரேல் தூதர் நார் கிலோனின் கருத்து மத்திய அரசுக்கு நெருக்கடியை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்