இனிமேல் 'உங்க பிளான்' எதுவுமே எங்கக்கிட்ட எடுபடாது...! 'இஸ்ரேல் பறக்க விட்ட பலூன்...' இது என்னெல்லாம் பண்ணும்னு தெரிஞ்சா மிரண்டு போய்டுவீங்க...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இஸ்ரேல் அதிநவீன ஏவுகணை மற்றும் விமானத்தை கண்காணிக்க கூடிய பாலூன் ஒன்றை வானில் செலுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

Advertising
>
Advertising

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் தங்கள் நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி இஸ்ரேலின் வடக்கு பகுதியில் ஏவுகனைகளை கண்காணிக்க கூடிய பாலூன் ஒன்றை அனுப்பவிருப்பதாக கடந்த புதன்கிழமை அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் வடக்கு பகுதியில் ட்ரோன்கள் பரவல் அதிகரித்து வருவதால் தங்கள் நாட்டின் வான் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு ஒரு முயற்சியாக இது இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

அதோடு, இதுகுறித்து  இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தின் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரிஸ் தலைமை நிர்வாக அதிகாரி போவாஸ் லெவி கூறும் போது, 'இந்த உயர் தர சென்சார் அமைப்புக் கொண்ட இந்த தொழில்நுட்பம் இஸ்ரேல் பகுதிக்குள் வரும் நீண்ட தூர ஏவுகணை, க்ருஸ் ஏவுகணை மற்றும் ட்ரோன்களை துல்லியமாக கண்டறிய பயன்படும். மேலும்,  வான்வழி கண்காணிப்பை உறுதி செய்கிறது. அதோடு, பல இலக்குகளுக்கு எதிராக செயல்திறனை அதிகரிக்கிறது' என தெரிவித்தார்.

மேலும், இஸ்ரேலிய விமானப்படை தலைவர் அமிகம் நோர்கின் இஸ்ரேலின் இந்த புதிய கண்டுபிடிப்பை பாராட்டியுள்ளார். இது 'மிகவும் துல்லியமான மற்றும் பரந்த விமான கண்காணிப்பு படத்தை உருவாக்க உதவும்' எனக் கூறியுள்ளார்.

ISRAEL, GIANT MISSILE, BALLOON

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்