அந்த 'ரெண்டையும்' பாம்ப் வச்சு தகர்ப்போம்...! 'பகிரங்க மிரட்டல் விடுத்த இஸ்ரேல்...' - வலுக்கும் உச்சக்கட்ட மோதல்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இஸ்ரேல் மற்றும் காசா பகுதிகளுகிடையே நடைபெறும் மோதலில் இரண்டு பள்ளிகளை குண்டு வைத்து தகர்க்க போவதாக இஸ்ரேல் மிரட்டல் விடுத்துள்ளது.

இஸ்ரேலின் ஜெருசலேம் நகருக்கு யூதர்கள், கிறிஸ்ததுவர்கள் மற்றும் முஸ்லிம்கள் உரிமை கொண்டாடி வருகின்றனர். இதனால், யூதர்கள் பெரும்பான்மையினராக உள்ள இஸ்ரேலுக்கும், முஸ்லிம்கள் அதிகம் உள்ள பாலஸ்தீனத்துக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு உள்ளது. இந்நிலையில், இரு நாட்டின் எல்லையில் உள்ள காசா மலைக்குன்று உள்ளிட்ட பகுதிகள், ஹமாஸ் எனப்படும் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளன.

ஜெருசலத்தில் உள்ள ஒரு வழிபாட்டு தலம் தொடர்பாக சமீபத்தில் பிரச்னை ஏற்பட்டது. அந்தப் பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களை, இஸ்ரேல் வெளியேற்றியது.

இதன்காரணமாக இஸ்ரேல் ராணுவம், பாலஸ்தீன காசா பகுதி மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு காசா போராளிகளும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக தெற்கு இஸ்ரேல் பகுதியில் பல அடுக்கு ரெட் அலெர்ட் போடப்பட்டுள்ளது.

இதுவரை குறைந்தது 58 குழந்தைகள் உட்பட, 1,200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் உள்ளூர் செய்திகளில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபைக்கு காசா பகுதியில் உள்ள இரண்டு பள்ளிகளை குண்டு வைத்து வெடிக்கச் செய்யப்போவதாக இஸ்ரேலிய இராணுவம் அச்சுறுத்தியுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

அல் அக்சா மற்றும் அல்-ராரக் ஆகிய இரண்டு பள்ளிகள் தான் என அரபி 21 நியூஸ் சேனலில் தெரிவிக்கப்பட்டது.

இந்த பள்ளிகளில் தான் இஸ்ரேலிய ராணுவத்தில் தாக்கப்பட்ட மக்களை தங்க வைக்கப்பட்டுள்ளாதாகவும்,  அங்கு ஏதேனும் தாக்குதல்கள் நடந்தால் அவை மிகவும் ஆபத்தான நிலைக்கு கொண்டு சென்றுவிடும் என பாலஸ்தீனிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்