உலக நாடுகளுக்கு பரவிய புதிய வகை குரங்கு அம்மை... தடுப்பூசி இருக்கா.‌.? நிபுணர்கள் சொல்வது என்ன?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள குரங்கு அம்மை நோய்க்கு பிரத்யேக தடுப்பூசிகள் தேவை இல்லை என ஐக்கிய நாடுகள் அவையின் சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | ஆனந்த் மஹிந்திராவுக்கு அமெரிக்காவில் கிடைத்த கவுரவம்.. நெகிழ்ச்சியில் போட்ட ட்வீட்..!

குரங்கு அம்மை

வைரஸ் தாக்குதலால் ஏற்படும் அரியவகை நோய் தான் இந்த குரங்கு அம்மை. இதில் மொத்தம் இரண்டு வகை மரபணுக்களை கொண்ட வைரஸ்கள் இருக்கின்றன. முதலாவது பிரிவைச் சேர்ந்த வைரஸ், மத்திய ஆப்பிரிக்க நாடுகளிலும் இரண்டாவது வகை மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் கண்டறியப்பட்டது. இருப்பினும் இதில் காங்கோ நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் தான் மிகுந்த ஆபத்தானதாக கருதப்பட்டது.

இந்நிலையில், ஆப்பிரிக்காவை தாண்டி ஐரோப்பியாவிலும் பரவ துவங்கியுள்ளது இந்த குரங்கு அம்மை. தற்போது வரை ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு வெளிநாட்டு பயணிக்கு குரங்கு அம்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அறிகுறிகள்

குரங்கு அம்மை பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம், சோர்வடைதல் ஆகியவை ஏற்படலாம். மேலும், இந்த நோயின் அறிகுறிகள் தோன்றிய 5 நாட்களுக்குள் உடலில் சிகப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். பின்பு அவை கொப்பளங்களாக மாறும். அடுத்த 2-4 வாரங்களில் இந்தக் கொப்பளங்கள் மறைந்து உதிர்ந்து விடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தடுப்பூசி

குரங்கு அம்மைக்கு என தனியாக சிகிச்சைகள் ஏதும் இல்லை. இருப்பினும் பெரியம்மைக்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள், இந்த குரங்கு அம்மை பரவலை தடுக்க பெரியளவில் கைகொடுக்கும் என்பது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், குரங்கு அம்மைக்கு என தடுப்பூசிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதில் நற்செய்தி என்னவென்றால், இந்த நோய் தாக்குதல் பெற்றவர்கள் முறையான மருத்துவ சிகிச்சையை பெற்றால், ஒன்றிரண்டு வாரங்களில் அவர்கள் முழுமையாக குணமடைந்துவிடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கொரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை பரவியது மக்களிடையே அச்சத்தை உருவாக்கியது. இருப்பினும், இந்த நோயை சரியான சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம் என மருத்துவர்கள் கூறியிருப்பது மக்களை நிம்மதியடையச் செய்துள்ளது.

Also Read | இலங்கை வரலாற்றுலயே இவ்வளவு ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனையானது கிடையாது..நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த விலை உயர்வு..!

MONKEYPOX DISEASE, VACCINE, குரங்கு அம்மை, தடுப்பூசி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்