"நீங்க வந்தா மட்டும் போதும்".. குடியேறும் மக்களுக்கு ₹25 லட்சம் கொடுக்க ரெடியாக இருக்கும் நாடு..?? கல்யாணமே செஞ்சு வைக்கிறாங்களா..?
முகப்பு > செய்திகள் > உலகம்தங்களது நாட்டில் குடியேறும் வெளிநாட்டவருக்கு லட்ச கணக்கில் பணம் கொடுப்பதாக இத்தாலி அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது பலரையும் ஆச்சர்யப்பட செய்திருக்கிறது.
Also Read | ஜாம்பவான் ஜெர்மனியை வீழ்த்திய ஜப்பான்.. மேட்ச் முடிஞ்சதும் வீரர்கள் செஞ்ச அடடே காரியம்.. FIFA பாராட்டு..!
ஐரோப்பாவில் அமைந்துள்ள அழகிய நாடு இத்தாலி. இந்நாட்டின் தென்கிழக்கே அமைந்துள்ளது பிரேஸிஸி (Presicce) என்னும் சிறிய நகரம். இங்கே வாழ்ந்துவந்த மக்கள் பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுவிட்டதால் இங்குள்ள பெரும்பாலான வீடுகள் காலியாக கிடப்பதாக சொல்லப்படுகிறது. பழங்கால கட்டிடங்களும், வானுயர்ந்த தேவாலயங்களை கொண்ட Presicce யில் மக்களை குடியேற செய்வதன் பொருட்டு அந்நாடு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி, Presicce -யில் நிரந்தரமாக குடியேறும் மக்களுக்கு 30,000 யூரோக்கள் (சுமார் 25 லட்ச ரூபாய்) வழங்கப்பட இருப்பதாக உள்ளூர் அரசு தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்மூலம், தங்களது நகரத்தில் மக்கள்தொகையை அதிகரிக்கவும், நகரத்தை மீண்டும் பொலிவுற செய்யவும் முடிவெடுத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இதுகுறித்து CNN ஊடகத்திடம் பேசிய உள்ளூர் கவுன்சிலர் ஆல்ஃபிரடோ பலீஸ்," 1991 க்கு முன்பு கட்டப்பட்ட வரலாற்று மையத்தில் கூட பல காலி வீடுகள் உள்ளன. அவை புதிய குடியிருப்பாளர்களுடன் மீண்டும் உயிர்ப்புடன் காண விரும்புகிறோம். வரலாறு, அற்புதமான கட்டிடக்கலை மற்றும் கலைகள் நிறைந்த எங்களது பகுதிகள் மெல்ல மெல்ல காலியாகி வருவதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது. இங்கு உள்ள கைவிடப்பட்ட வீடுகளில் ஒன்றை வாங்க விரும்பும் மக்களுக்கு நாங்கள் 30,000 யூரோக்கள் வரை வழங்குவோம். மொத்த நிதி இரண்டாகப் பிரிக்கப்படும்: இது ஓரளவு பழைய வீட்டை வாங்குவதற்கும், ஓரளவு மறுசீரமைப்பதற்கும் போதுமானதாக இருக்கும்" என்கிறார். இதுகுறித்த விண்ணப்பங்கள் வரும் வாரங்களில் வினியோகிக்கப்படும் எனவும் பலீஸ் சொல்லியிருக்கிறார்.
இதேபோல, இத்தாலியின் லாசியோ நகரத்தில் மக்களை குடியமர்த்த இன்னும் வித்தியாசமான முயற்சியில் அரசு இறங்கியுள்ளதாக தெரிகிறது. இங்கு வழக்கமாக அதிகளவில் திருமணங்கள் நடைபெறும். கொரோனா காரணமாக இப்பகுதிக்கு மக்கள் செய்வது குறைந்துவிட்டதால் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார்களாம். அதாவது, இங்கே திருமணம் செய்ய நினைப்பவர்களுக்கு 1.67 லட்ச ரூபாயை அளிக்க அரசு சம்மதம் தெரிவித்திருக்கிறதாம். இணைவாசிகள் இப்போது இத்தாலியின் இந்த அறிவிப்பு பற்றித்தான் பேசிவருகின்றனர்.
Also Read | "கடுமையான தண்டனை கிடைக்கணும்".. நாட்டையே உலுக்கிய ஷ்ரத்தா வழக்கு.. உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிரடி..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இந்த இடம் தான் Safe.. பூமிக்கு அடியில் இருக்கும் நகரம்.. உள்ளேயே செட்டில் ஆன ஆயிரக்கணக்கான மக்கள்.. சுவாரஸ்ய பின்னணி..!
- ஹாலோவீன் திருவிழாவில் கூட்ட நெரிசல்.. திடீர் நெஞ்சுவலியால் விழுந்த நூற்றுக்கணக்கானோருக்கு சாலையில் வைத்து 'CPR' முதலுதவி... நடுங்க வைக்கும் பின்னணி!!
- பைக் வாங்க ஷோ ரூம் போன இளைஞர்.. காச எடுங்கன்னு சொன்னதும்.. "மனுஷன் சில்லறைய செதற விட்டாப்ல".. இதான் காரணமா?
- வெறுங்காலோட உணவு டெலிவரி.. அதுக்கான காரணத்த சிரிச்சுக்கிட்டே சொன்ன ஊழியர்.. "ஆனா அத கேட்டவங்க கலங்கி போய்ட்டாங்க"
- "மினிஸ்டர் வேண்டப்பட்டவரு தான்".. பலமுறை திருமணம்.. எக்கச்சக்க ரீல் அளந்த பெண்.. புது மாப்பிள்ளையா மாற போனவர் வெச்ச ட்விஸ்ட்!!
- பூமிக்கு அடியில மர்ம சத்தம்.. அச்சத்தில் கிராமம்.. 9,700 பேர் மரணிக்க காரணமா இருந்த இடமா.?
- "வயல்'ல தோண்டுறப்போ கெடச்ச சாமி சிலை'ங்க இது".. பயபக்தியுடன் தொழுது காணிக்கை போட்ட மக்கள்.. "உண்மை தெரிஞ்சதும் ஊரே நடுங்கி போச்சு"
- "சைஸ்'ல குட்டி தான், ஆனா"... பீச் போறவங்களுக்கு எச்சரிக்கை.. மண்ணுல பதுங்கி இருக்கும் கொடிய 'மீன்'
- "ஈ தொல்லையால் அல்லல்படுறோம்.. ஒரு டீ கூட குடிக்க முடியல".. தமிழ்நாட்டுல 'ஈ'ப்படி ஒரு கிராமமா?
- தோசை கூட வீட்டில் சுடாத கிராமம்.. "எல்லாத்துக்கும் அந்த ஒரு சாபம் தான் காரணமா??".. திகைக்க வைக்கும் 'வரலாறு'!!