'விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டாரா?...' 'ஃபிளைட் கிளம்பிருச்சா?...' 'இதெல்லாம்' உண்மையா?...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதாக வெளியான தகவல் உண்மை இல்லை என தற்போது தெரியவந்துள்ளது.

Advertising
Advertising

இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாத வழக்கில் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை லண்டனிலிருந்து நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மல்லையா மீதான வழக்கு விசாரணையில் கடந்த மே 14ஆம் தேதி உத்தரவிட்ட இங்கிலாந்து நீதிமன்றம், அடுத்த 28 நாட்களுக்குள் விஜய் மல்லையாவை நாடு கடத்தலாம் என்று தெரிவித்தது.

இந்த சூழலில் தான் விஜய் மல்லையா மும்பைக்கு அழைத்து வரப்படுகிறார் என்று நேற்று இரவு முதல் செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதாவது விமானம் மூலம் விஜய் மல்லையா புறப்பட்டு விட்டதாகவும், அவருடன் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளும் உடன் வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தியா வந்தவுடன் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு மும்பை ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அடைக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகின.

ஆனால், மல்லையாவின் தனிப்பட்ட உதவியாளர் கூறுகையில், மல்லையா நாடு கடத்தப்படுவது பற்றி தனக்கு எந்தவொரு தகவலும் தெரியாது என்று கூறியுள்ளார்.

மல்லையாவின் வழக்கறிஞர் ஆனந்த் தூபே தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை. இதுபற்றி விஜய் மல்லையாவிடம் வாட்ஸ்-அப் மூலம் கேள்வி எழுப்பிய போது. அதற்கு பதிலளித்துள்ள அவர், "நாடு கடத்தப்படுவதாக யார் கூறுகிறார்களோ அவர்களுக்கு தான் இதன் உண்மை வெளிச்சம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

லண்டனில் உள்ள இந்திய உயர் கமிஷனின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்  சிபிஐ-ன் பழைய அறிக்கைகளை வைத்துக் கொண்டு சில ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. மல்லையா இந்தியா கொண்டு வரப்பட காலதாமதம் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான ஆவணங்களில் இங்கிலாந்து உள்துறை செயலாளர் பிரீத்தி பாட்டீல் இன்னும் கையெழுத்திடவில்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில் அந்நாட்டு நீதிமன்றங்களில் மல்லையாவிற்கு எதிரான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதையொட்டி இங்கிலாந்து தஞ்சம் கோரி விஜய் மல்லையா விண்ணப்பம் செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்