எல்லாமே 'மர்மம்' தான்... கொரோனா போல 1500 கொடிய 'வைரஸ்' அங்க இருக்கு... சீனாவுக்கு எதிராக 'சிஐஏ'-வை ஏவிய அமெரிக்கா!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்கா, சீனா இடையே ஏற்பட்டுள்ள மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கொரோனாவை திட்டமிட்டே பரப்பியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து சீனா மீது குற்றஞ்சாட்டி வருகிறார். ஆனால் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை சீனா மறுத்து வருகிறது. இதற்கிடையில் சீனாவில் உள்ள வுஹான் ஆய்வக மையத்தில் சுமார் 1500 கொடிய வைரஸ்களை சீனா ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆய்வு மையத்தில் கடந்த 20 ஆண்டுகளாக ஹெச்.ஐ.வி-க்கு எதிராக மருந்து கண்டுபிடிக்க சீனா முயற்சித்து வருகிறது.
இந்த நிலையில் தான் இங்கிருந்து கொரோனா வைரஸ் பரவியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சீனா திட்டமிட்டு கொரோனா வைரஸை பரப்பி இருந்தால் அதற்கான விளைவுகளை சீனா சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளிப்படையாக எச்சரித்து இருக்கிறார். கொரோனா உருவான சீனாவில் 4632 பேர்தான் இறந்துள்ளனர்.(சமீபத்தில் இந்த கணக்கை சீனா திருத்தியது) ஆனால் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. பொருளாதாரத்தில் மிகுந்த பலம் வாய்ந்த நாடுகள் பலவும் தற்போது சீர்குலைந்து கிடக்கும் நேரத்தில் சீனா பிற நாடுகளின் நிறுவனங்களை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. (இதனால் இந்திய அரசு அவசர அவசரமாக விதிகளை திருத்தி சீனாவுக்கு செக் வைத்தது குறிப்பிடத்தக்கது)
சீனா மேற்கொண்டு வரும் இந்த விஷயங்கள் பிற நாடுகளை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் அமெரிக்கா, ஜெர்மனி நாடுகள் சீனாவிடம் நஷ்டஈடு கேட்க ஆரம்பித்து இருக்கின்றன. இதுதவிர ஜப்பான், அமெரிக்கா, இத்தாலி, கனடா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகள் கூட்டு சேர்ந்து சுமார் 6.8 டிரில்லியன்களை நஷ்ட ஈடாக கேட்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல ஆஸ்திரேலியா நாடும் 58 பில்லியன் டாலர்களை நஷ்ட ஈடாக கேட்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சீனாவின் அசைவ சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் உருவாகவில்லை.
மாறாக வுஹான் ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா உருவாகியுள்ளது என அமெரிக்கா நம்புகிறது. இதனால் தான் சீனாவுக்கு எதிராக அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ-வை அதிபர் டிரம்ப் ஏவிவிட்டு, உண்மைகளை வெளிக்கொணரும்படி கேட்டுக்கொண்டு இருக்கிறார். சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என்பதற்கான உறுதியான ஆதாரங்களை திரட்டும் பணியில் தற்போது அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. ஆனால் இரும்புத்திரை நாடு என்று அறியப்படும் சீனாவில் இருந்து தகவல்களை வெளிக்கொணருவது மிகவும் கடினமான விஷயம் என்பதால், உலக நாடுகள் இதை உற்றுநோக்கி வருகின்றன.
மற்ற செய்திகள்
“2 நாளைக்கு ரேபிட் டெஸ்ட் கிட் கொண்டு கொரோனா பரிசோதனை பண்ண வேண்டாம்!” - ICMR-ன் அதிரடி அறிவுறுத்தல்!
தொடர்புடைய செய்திகள்
- 'அறிகுறிகளே' இல்லாத 'கொரோனா தொற்று...' 'ஒரு வகையில் பாஸிடிவ்தான்...' "மருத்துவர்கள் கூறும் காரணம் என்ன?..."
- கொளுத்தும் வெயிலில்... கொட்டும் மழையில்... மரத்தின் மீது ஏறி... மாணவர்கள் கல்விக்காக யாரும் செய்யத் துணியாத காரியம்!.. மெய்சிலிர்க்க வைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!
- 'தனியார்' மருத்துவமனையில் 'பணிபுரியும்' 19 செவிலியர்கள் மற்றும் 6 ஊழியர்களுக்கு 'கொரோனா'!
- 'ஜூன் 1' வரை ஊரடங்கு 'நீட்டிப்பு'... கொரோனா 'பரவலை' தடுப்பதற்காக... 'அதிரடி' அறிவிப்பை வெளியிட்டுள்ள 'நாடு'...
- 'கொரோனாவால் வந்த ப்ரஷரை'.. 'பிஹூ' டான்ஸ் ஆடி குறைக்கும் காவலர்கள்!.. களைகட்டிய 'கண்ட்ரோல் ரூம்!'.. வீடியோ!
- கொரோனாவால் இறந்தவங்கள ‘அடக்கம்’ பண்ண எதிர்ப்பு தெரிவிச்சா.. இனி ‘அதிரடி’ ஆக்ஷன் தான்.. காவல்துறை கடும் எச்சரிக்கை..!
- 'கொரோனா வைரஸை அழிக்கும் இ-சானிடைசர்...' 'இதெல்லாம்' உள்ள வைக்கலாம்...! 'வெறும் 20 நிமிசத்துல அழிச்சிடும்...' மதுரை எஞ்சினியரின் கண்டுபிடிப்பு...!
- 'சுத்தமாயிடுச்சுனு சொல்லாதீங்க.. இங்க வந்து பாருங்க!'.. கங்கை நதியை ஆராய்ந்த அதிகாரிகள்... இந்தியாவையே கொண்டாட்டத்தில் திளைத்த சம்பவம்!.. என்ன நடந்தது தெரியுமா?
- இதுவரை 'பார்த்ததெல்லாம்' அல்ல... 'இனிதான்' கொரோனாவின் 'கோரமான' பாதிப்புகள் இருக்கும்... என்ன 'காரணம்?'... 'அதிர்ச்சி' கொடுக்கும் 'எச்சரிக்கை'...
- 'மனவருத்தமளிக்கிறது' மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும்: தமிழக முதல்வர்