வயிற்று வலியால் துடித்த சிறுமி.... 'ஸ்கேன்' ரிப்போர்ட்டில் காத்திருந்த அதிர்ச்சி... உறைந்து போன 'மருத்துவர்கள்'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆஸ்திரேலியாவில் வயிற்று வலியால் துடித்த சிறுமி ஒருவரின் வயிற்றிலிருந்து இரும்புக் குண்டுகளை எடுத்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரெபெக்கா என்பவரின் 7 வயது மகள் ஒலிவியாவுக்குத்தான் இந்த சோகம் நடந்தேறியுள்ளது. ஒலிவியா எப்போதும் தனது அறையில் தனியாக விளையாடிக் கொண்டிருப்பார். ஒரு நாள்  திடீரென வயிற்றை பிடித்தபடி அலறித் துடித்தார் ஒலிவியா. இதனால் பதறிப்போன ரெபெக்கா தனது குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். அங்கு ஒலிவியாவின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

காரணம் அவளது வயிற்றில் சிறுசிறு இரும்புக் குண்டுகள் செரிமானக் குடலை அடைத்தபடி இருந்தது. இதுகுறித்து ஒலிவியாவிடம் கேட்டபோது தன்னுடைய விளையாட்டு பொருட்களிலிருந்த இரும்புக் குண்டகளை தான் விழுங்கிவிட்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இரும்புக் குண்டுகளை ஒலிவியாவின் வயற்றிலிருந்து மருத்துவர்கள் அகற்றினர்.

OLIVIA, AUSTRALIA, STOMECH PAIN, IRON GRENADES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்