என் புருஷன் விற்பனைக்கு! ஒரு தடவ வாங்கிட்டா ரிட்டர்ன் வாங்க மாட்டேன்.. நோ எக்ஸ்சேஞ்ச்.. பல கண்டிஷன்களை அடுக்கிய மனைவி

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அயர்லாந்து: அயர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் டிரேட் மீ என்ற இணையதளத்தில் தன் கணவரை விற்க போட்ட போஸ்ட் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

என் புருஷன் விற்பனைக்கு! ஒரு தடவ வாங்கிட்டா ரிட்டர்ன் வாங்க மாட்டேன்.. நோ எக்ஸ்சேஞ்ச்.. பல கண்டிஷன்களை அடுக்கிய மனைவி
Advertising
>
Advertising

கணவன் மனைவி உறவு என்பது விசித்திரமானது. இதில் எப்படி உறவு சிக்கல் வரும் என்று யாராலும் கணிக்க முடியாது. பிரச்சனை வந்து அடுத்த நிமிடமே இயல்பாகவும் செய்யும். நாட்கணக்கில் சண்டை நீடித்து பிரிவு வரைக்கும் செல்வதுண்டு. புரிந்துணர்வு இல்லாத காரணத்தினால் ஏராளம் மன முறிவு ஏற்பட்டு மண முறிவு வரைக்கும் செல்கிறது. இந்த நிலையில் ஐரிஷ் மனைவி ஒருவர் செய்துள்ள காரிய டிரெண்ட் ஆகி வருகிறது.

அயர்லாந்தை சேர்ந்த லிண்டா மலிஸ்டர் என்ற பெண்ணுக்கும் ஜான் மலிஸ்டர் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம்  ஆனது. இந்த நிலையில் லிண்டா டிரேட் மீ என்ற இணையதளத்தில் தன் கணவர் விற்பனைக்கு உள்ளதாக பதிவிட்டுள்ளார்.

Irish wife posted a post website TradeMe sell her husband

இன்னும் பயிற்சி தேவைப்படுகிறது:

அந்த விளம்பரத்தில் அவரின் புகைப்படம் போட்டு, 'ஜானுக்கு 37 வயது ஆகிறது. சுமார் 6.1 அடி உயரம். ஜான் தற்போது மாடு வளர்ப்பு தொழில் செய்து வருகிறார். இதற்கு முன்பு இவருக்கு ஏராளமான உரிமையாளர்கள் உண்டு.  மாடு வளர்ப்பு தொழில் செய்து வரும் ஜானுக்கு முறையாக இரை வைத்து, தண்ணி காட்டினால் மிகுந்த விசுவாசத்துடன் இருப்பார். ஆனால், இன்னும் சில வீட்டு பயிற்சி இவருக்கு தேவைப்படுகிறது. ஆனால், எனக்கு அதற்கான பொறுமையோ, நேரமோ இல்லை.

ஒரு மணி நேரத்தில் 12 பேர் வாங்க முன்வந்தனர்:

எனவே இப்போது நான் அவரை விற்பனை செய்வதை தவிர வேறு வழி இல்லை. ஒரு கண்டீஷன் மட்டுமே உள்ளது. இந்த விற்பனையில் ரிட்டர்ன் அல்லது எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ளப்பட மாட்டாது' எனக் கூறியுள்ளார். தன் மனைவி லிண்டா செய்த இந்த விளம்பரம் தனது நண்பர்கள் மூலமாக ஜானுக்கு தெரியவந்ததுள்ளது. இதில் ஸ்பெஷலான விஷயம் என்னவென்றால் ஏல விளம்பரம் வெளியான ஒரு மணி நேரத்தில் 12 பேர் அதற்கு ஏலம் கேட்டிருந்தனர்.

விதி மீறல்:

ஜான் ரூ.5 ஆயிரம் வரை விலை கேட்கப்பட்டது. இதற்கிடையே, வர்த்தக விதிகள் மீறப்பட்டதாகக் கூறி, டிரேட் மீ இணையதளம் அந்த விளம்பரத்தை நீக்கியது. சமீப காலங்களில் தனது கணவர் விற்பனைக்கு என்று வெளியிடப்பட்ட முதலாவது விளம்பரம் இது என்று அந்த நிறுவனத்தின் மேலாளர் ஜேம்ஸ் ராயன் தெரிவித்தார்.

IRISH, IRELAND, WIFE, TRADEME, SELL, HUSBAND, அயர்லாந்து, கணவன், விற்பனைக்கு, மனைவி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்