'என் மக்கோள்!'.. 'கோர தாண்டவம் ஆடும் கொரோனா!'.. 'நாட்டு மக்களுக்காக மீண்டும் மருத்துவ பணிக்கு திரும்பிய 'பிரதமர்'!
முகப்பு > செய்திகள் > உலகம்உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ள நிலையில், அயர்லாந்து பிரதமர் 7 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மருத்துவ பணிக்கு திரும்பியுள்ளார்.
இந்தியா, ஸ்பெயின், அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுக்கு எதிராக கடுமையாக போராடி வரும் சூழலில் அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர், கொரோனாவை எதிர்த்து மருத்துவப் பணியாளாராக தன்னாலான சிறிய உதவியேணும் செய்ய வேண்டும் என்று இத்தகைய முடிவை எடுத்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ, 7 ஆண்டுகளுக்கு முன்புவரை மருத்துவராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு அரசியலுக்குள் நுழைந்தார். அதன் பின்னர் அவர் சுகாதாரத்துறை அமைச்சரானார். இதனை அடுத்து அவரது மருத்துவருக்கான லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அயர்லாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 158 பேர் உயிரிழந்துமுள்ளனர்.
இதனை அடுத்து கொரோனாவை எதிர்த்து போரிட நாடு முழுவதுமுள்ள மருத்துவ பணியாளர்கள் தங்கள் பங்களிப்பை அரசுக்கு தர முன்வர வேண்டும் என்று அந்நாட்டின் தற்போதைய சுகாதார அமைச்சர் சிமோன் ஹாரிஸ் விடுத்த அழைப்பினை ஏற்று 60 ஆயிரம் மருத்துவர்கள் கொரோனாவுக்கு எதிரான மருத்துவ பங்களிப்பில் இணைந்தனர். அந்த 60 ஆயிரம் பேரில் ஒருவர்தான் லியோ. ஆம், தானும் இந்த பணிகளில் இணைந்து, வாரம் ஒருமுறை பணிபுரிந்து வருகிறார். கொரோனா அறிகுறி அல்லது அச்சத்துடன் போன் செய்பவர்களின் போன் காலை அட்டென் செய்து பேசியும், கொரோனா இருக்கா இல்லையா என ஸ்கிரீனிங் செய்து பார்க்கும் முதற்கட்ட பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ள லியோ, இதற்கென தன் குடும்பத்தாரையும் இந்த விதமான தன்னார்வ பணிகளில் ஈடுபட வைத்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எங்க இதயமே நின்னு போச்சு'...'கண்ணீர் வடித்த இங்கிலாந்து'... இந்திய மருத்துவருக்கு நேர்ந்த பரிதாபம்!
- 'இனிமே நாங்க 'இத' செய்ய மாட்டோம்!'... உச்சபட்ச கோபத்தில் ட்ரம்ப்!... என்ன காரணம்?
- கொரோனா வைரஸ் 'அதனால'தான் வந்துச்சு...! 'இங்கிலாந்தில் புதிதாக பரவிய வதந்தி...' 5ஜி நெட்வொர்க் டவர்கள் தீ வைத்து எரிப்பு...!
- 'முழுமையாக' நீக்கப்பட்ட 'லாக் டவுன்'... 'அறிகுறிகள்' இல்லாமலேயே ஏற்படும் 'பாதிப்பால்'... 'கவலை' தெரிவிக்கும் 'நிபுணர்கள்'...
- 'கொரோனா மருந்து எனக் கூறி...' 'ஊமத்தை பூ மருந்து குடித்த...' '8 பேர் கவலைக்கிடம்...' "எதைக் குடுத்தாலும் குடிச்சிருவிங்களா..." 'வெறுத்துப் போன போலீசார்...'
- 'மக்களுக்கு ஒரு நல்ல செய்தி'...'துபாயிலிருந்து வந்தவருக்கு குணமாயிடுச்சு'... ஆட்சியர் வெளியிட்ட தகவல்!
- டெல்லி ‘தப்லீக்’ மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தப்ப முயற்சி.. சென்னை விமானநிலையத்தில் சிக்கிய 10 பேர்..!
- 'தமிழகத்தில் மருத்துவர்களையும் விட்டுவைக்காத கொரோனா'... 'மனைவிக்கும் பரவிய சோகம்'!
- 'கடந்த 24 மணி நேரத்தில்...' 'இந்தியாவில் அதிகரித்த உயிரிழப்பு...' ஊரடங்கை நீட்டிக்க கோரிக்கை விடுத்த மாநிலம்...!
- ‘கொரோனாவால பாதிக்கப்பட்டவர் இத கண்டிப்பா ஃபாலோ பண்ணணும்’.. ‘இல்லன்னா அவர் மூலம் 406 பேருக்கு வைரஸ் பரவும்’.. வெளியான் ஷாக் ரிப்போர்ட்..!