"20 வருஷமாச்சு,, அது தொலைஞ்சு போய்",,.. 'பர்ஸை' பறிகொடுத்த நபருக்கு 'ஜஸ்ட் 24 மணி' நேரத்தில் சர்ப்ரைஸ் கொடுத்த 'போலீஸ்'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்அயர்லாந்து நாட்டில் 20 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன நபரின் பர்ஸ் ஒன்று அவரிடம் மீண்டும் வந்து சேர்ந்துள்ளது.
அயர்லாந்து நாட்டின் கவுண்டி டப்ளின் என்னும் பகுதியில், பர்ஸ் ஒன்றை நபர் ஒருவர் போலீஸ் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார். தொடர்ந்து, அந்த பர்ஸின் உரிமையாளர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர்களின் விசாரணையில் பல சுவாரஸ்யமான தகவல்கள் இடம்பெற்றிருந்தது.
அந்த பர்ஸுக்குள், 2001 ஆம் ஆண்டிலுள்ள மாணவர் ஒருவரின் ஐ.டி கார்டு இடம்பெற்றிருந்தது. அதனுடன் விசா கிரெடிட் கார்டும் இருந்துள்ளது. அதிலிருந்த தகவலை கொண்டு போலீசார் பர்ஸின் உரிமையாளர் முகவரியை கண்டுபிடித்தனர். அதன் பின், உரிமையாளரிடம் பர்ஸ் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான பதிவு ஒன்றை போலீசார் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். '20 ஆண்டுகள் நீடித்த மர்மம், 24 மணி நேரத்தில் தீர்க்கப்பட்டது' என அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தனர்.
இது தொடர்பான பதிவு அதிகம் வைரலான நிலையில், பலர் இந்த பதிவிற்கு கீழ் நகைச்சுவையான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட கார்... கார ஓப்பன் பண்ணி பாத்தப்போ... ''முப்பது வருஷத்துக்கு முன்னாடி காணாம போனவரோட''... வெளியான 'திடுக்'கிடும் 'உண்மை'!!!
- 'தொலைந்து 14 வருடம் கழித்து கிடைத்த பர்ஸ்'... 'ஆசையா பர்ஸை வாங்க போன நபர்'... பர்ஸை திறந்தபோது காத்திருந்த ட்விஸ்ட்!
- ‘வயாகரா கலந்த நீரை குடித்த செம்மறி ஆடுகள்’!.. ‘ஒன்னு இல்ல ரெண்டு இல்ல மொத்தம் 80,000 ஆடுகள்’.. மிரளவைத்த சம்பவம்..!
- ‘39 பேரின் சடலங்களுடன் நுழைந்த கண்டெய்னர் லாரி’.. ‘அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்ற போலீஸார்’..
- 'பர்ஸை மிஸ் பண்ணிய நபர்'... 'பணத்தை அக்கவுண்ட்டில் அனுப்பிய முன்பின் தெரியாதவர்'.. நெகிழ்ச்சி சம்பவம்!
- ‘இப்படியெல்லாம் கூட ஏடிஎம்ல திருட முடியுமா?’.. ‘ரூம் போட்டு யோசிப்பாங்க போல’..
- இந்திய அணி பற்றி கிண்டலாக ட்வீட் செய்த பிரபல வீரர்.. ‘கலாய்த்தெடுத்த இந்திய ரசிகர்கள்..’
- “அட இதாங்க பாசம்”!... எங்களாமோ தேடுனேன், தன் ‘103 வயது அம்மாவை 60 வருஷத்திற்கு பிறகு கண்டுபிடிச்ச 80 வயது பெண்’ கூறிய நெகிழ்ச்சியூட்டும் காரணம்!