‘1 மணி நேர Pleasure Marriage’.. ‘அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள பிபிசியின் டாக்குமெண்டரி’..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஈராக்கில் சிறுமிகளை ஒரு மணி நேரத்திற்கு வரதட்சணை கொடுத்து இன்பத் திருமணம் (Pleasure Marriage) செய்துகொள்ள மதகுருக்கள் அனுமதிப்பதாக பிபிசியின் ஆவணப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிபிசி பத்திரிக்கையாளர் ஒருவர் ஈராக்கிலுள்ள கர்பலாவுக்குச் சென்று இந்த ஆவணப்படத்தை யாருக்கும் தெரியாமல் படம் பிடித்துள்ளார். அதில் இன்பத் திருமணம் என்பதற்கு மனைவியை விட்டு விலகி இருப்பவர் ஏதேனும் ஒரு சிறுமியை சுமார் ஒரு மணி நேரம் முதல் குறிப்பிட்ட காலத்துக்கு மனைவியாக்கிக் கொள்வது எனப் பொருள் கூறப்பட்டுள்ளது. இதற்காக அந்தச் சிறுமிக்கு வரதட்சணை வழங்கப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஈராக்கில் தடை செய்யப்பட்டுள்ள இன்பத் திருமண முறையை 10ல் 8 மத குருக்கள் நடத்தி வைக்கத் தயாராக இருப்பதாகவும் அந்த செய்தியாளர் கூறியுள்ளார். தான் யார் எனக் கூறாமல் அந்த செய்தியாளர் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென மதகுரு போன்ற ஒருவரை அணுகுவதுபோல அதில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் சிறுமிகள் புகார் அளிக்காதவரை மதகுருக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என அரசு அதிகாரிகள் தரப்பில் பதிலளிப்பதாகவும் அந்த ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

IRAQ, PLEASURE, MARRIAGES, TEMPORARY, SHOCKING, GILRS, 9YEAROLD, BBC, DOCUMENTARY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்